SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நடுக்கடலில் சரக்குக் கப்பலில் தீ விபத்து: 22 பேர் பத்திரமாக மீட்பு

2018-06-14@ 15:45:41

ஹால்டியா : எஸ்எஸ்எல் கொல்கத்தா என்ற சரக்குக் கப்பலில் நடுக்கடலில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. எஸ்எஸ்எல் கொல்கத்தா என்ற சரக்குக் கப்பலில் இருந்த 22 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். நடுக்கடலில் சரக்குக் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதாக கடலோரக் காவல்படைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மேற்கு வங்கத்தின் ஹால்டியா பகுதியிலிருந்து ராஜ்கிரண் என்ற கப்பலை மீட்க  சென்றது.


மேலும் மீட்புப் பணிக்காக நடுக்கடலுக்கு ஹெலிகாப்டரும் விரைந்தது. மோசமான வானிலை மற்றும் கடல் கொந்தளிப்பு ஆகிய காரணங்களால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது. அதன் பின்னர் கப்பலில் இருந்த 22 பேரில் முதற்கட்டமாக 11 பேர் மட்டுமே மீட்கப்பட்டனர். அதன் பின்னர் நீண்ட போராட்டத்துக்குப் பின் மீதமுள்ள 11 பேரும் மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • amerika_12

    இயற்கையின் கோரப் பிடியில் அமெரிக்கா : அடுத்தடுத்த சூறாவளி தாக்குதல்களுக்கு சின்னாபின்னமாகும் நகரங்கள்

  • kochi_fire11

    கொச்சியில் உள்ள வணிக வளாக கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து : 3 கடைகள் எரிந்து நாசம்

  • modi_varanasi11

    நரேந்திர மோடி வருகையால் விழாக்கோலம் பூண்டது வாரணாசி : காசி விசுவநாதர் கோவிலில் மோடி சிறப்பு வழிபாடு

  • nheru_soniaa11

    நாட்டின் முதலாவது பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 55வது நினைவு தினம் : சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி

  • malar_modi12

    2வது முறையாக பிரதமராகும் நரேந்திர மோடி ; கட்சித் தலைவர்கள் மோடிக்கு மலர் கொத்துக்களுடன் வாழ்த்து

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்