SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பா.ஜ எனது கட்சி என்றாலும் லாலு எனக்கு குடும்பம் போன்றவர் : சத்ருகன் சின்ஹா பேச்சு

2018-06-14@ 15:23:13

பாட்னா:பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி-யுமான சத்ருகன் சின்ஹா பிரதமர் மோடி தலைமையிலான அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்நிலையில் பீகார் மாநிலத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் நடத்தப்பட்ட ரம்ஜான் இஃப்தார் விருந்தில் பங்கேற்றார். விருந்தின் போது பேசிய அவர் பா.ஜ. எனது கட்சியாக இருந்தாலும், லாலு, ராப்ரி தேவி, தேஜஸ்வி, தேஜ், மிஸா ஆகிய அனைவரும் என் குடும்ப நண்பர்கள் என்றார். எனவே எனது குடும்பத்தின் அழைப்பை ஏற்று இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்ததாக கூறினார்.

மேலும் பேசிய அவர் லாலுவின் மகனான தேஜஸ்வி யாதவ், அரசியலில் சிறப்பாக பங்காற்றி பாட்னா பாபு என்ற பெயரைப் பெற்றவர். ஆனால் இவரை பா.ஜ.க. முறையாக கவுரவிப்பதில்லை. இது ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார். பா.ஜ.க.வில் இருந்து விலகி லாலு பிரசாத் யாதவ்வின் கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இணைந்துவிடுவார் என பலரும் கூறி வரும் கருத்துக்கு சத்ருகன் சின்ஹா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-06-2018

    23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_protest123

    நீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது

  • cleanesttrainPurityIndia

    ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா

  • fifa_fans123

    உலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்!

  • whatsapp_police11

    வாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்