SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுரை அரசு மருத்துவமனை துப்பரவு பணியாளர்கள் சாலை மறியல்

2018-06-14@ 15:07:25

மதுரை: மதுரை அரசு மருத்துவமனை துப்பரவு பணியாளர் தற்கொலை செய்துகொண்டதற்கு மேலதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி ஒப்பந்த தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மதுரை அரசு மருத்துவமனையில் பத்மாவதி ஒப்பந்த நிறுவனத்தின் கீழ் 5 ஆண்டுகளாக துப்பரவு பணியாளராக பணி புரிந்த வைரமணி என்பவர் நேற்று மலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

பத்மாவதி ஒப்பந்த நிறுவனத்தின் மேலாளர் ஹரிகிருஷ்ணன் தரக்குறைவாக பேசியதால் அவமானத்தில் வைரமணி தற்கொலை செய்து கொண்டதாக அவர் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.  இதனை அடுத்து ஹரிகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், வைரமணி குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க கோரியும் மதுரை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 300-க்கும் மேற்பட்ட துப்பரவு பணியாளர்கள் அரசு மருத்துவமனை முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்