SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தகுதி நீக்கம் செல்லாதென 3வது நீதிபதி தீர்ப்பு வழங்குவார் என நம்புகிறேன் : திருமாவளவன்

2018-06-14@ 14:47:26

சென்னை: தகுதி நீக்க வழக்கில் இருதரப்பினரும் மகிழ்ச்சி அடைய  முடியாத தீர்ப்பு என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். பொதுமக்கள் எதிர்பாராத தீர்ப்பை நீதிமன்றம் வழங்கி உள்ளது என்றும் மிகக்குறுகிய காலத்தில் வழக்கில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். மேலும் தகுதி நீக்கம் செல்லாதென 3வது நீதிபதி தீர்ப்பு வழங்குவார் என நம்புவதாக திருமாவளவன் தெரிவித்தார். 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என தலைமை நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லாது என்று நீதிபதி சுந்தர் தெரிவித்தார். 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்க வழக்கில் நீதிபதிகள் இருவரும் மாறுப்பட்ட தீர்ப்பு வழங்கியுள்ளதால் வழக்கு வேறொரு நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்