SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்க வழக்கில் 3வது நீதிபதி யார் என்பதை நீதிபதி குலுவாடி ரமேஷ் அறிவிப்பார் : தலைமை நீதிபதி

2018-06-14@ 14:26:55

சென்னை: 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என தலைமை நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லாது என்று நீதிபதி சுந்தர் தெரிவித்தார். 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்க வழக்கில் நீதிபதிகள் இருவரும் மாறுப்பட்ட தீர்ப்பு வழங்கியுள்ளதால் வழக்கு வேறொரு நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை விசாரிப்பதற்கான 3வது நீதிபதி யார் என்பதை நீதிபதி குலுவாடி ரமேஷ் அறிவிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

அடுத்த வாரமே 3வது நீதிபதி நியமிக்கப்படுவார் என்று அறிவிப்பு வெளியாக உள்ளது என்றும் தலைமை நீதிபதிக்கு அடுத்த இடத்தில் உள்ள மூத்த நீதிபதி குலுவாடி ரமேஷ் 3வது நீதிபதியை அறிவிப்பார் என்றும் தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி தெரிவித்தார்.இதற்கிடையே சபாநாயகர் உத்தரவில் நீதித்துறை தலையிடக்கூடாது என்பதால் தகுதி நீக்கம் செல்லும் என்று கூறிய பேனர்ஜி  சபாநாயகர் உத்தரவை நீதித்துறை மறு ஆய்வுக்கு உட்படுத்தக்கூடாது என்றும் சபாநாயகரின் முடிவு என்பது உரிய காரணங்களுக்கு பிறகே எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார் . முதல்வர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பதவியிலிருந்து நீக்கக்கோரி டிடிவி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கடந்த 2017 செப்டம்பர் 18-ம் தேதி ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததையடுத்து, 18 எம்.எல்.ஏ-க்களை பேரவைத் தலைவர் தனபால் தகுதி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • fifa_fans123

    உலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்!

  • whatsapp_police11

    வாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்

  • manila_fire_accident

    மணிலாவில் இந்த ஆண்டு இதுவரை 2,200 தீ விபத்து... முடிவற்ற போரில் சிக்கி தவிக்கு தீயணைப்பு வீரர்களின் படதொகுப்பு!

  • vivsayigal_8valisaalai11

    8 வழிச்சாலைகாக கையகப்படுத்தும் நிலத்தை அளவிடும் பணி : வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு கதறும் விவசாய குடும்பத்தினர்

  • Hogenakkalparisalagain

    ஒகேனக்கல்லில் மீண்டும் களைகட்டிய பரிசல் சவாரி : உற்சாகத்தில் சுற்றுலாப் பயணிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்