SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரதமரின் உடற்பயிற்சி காட்சி நகைப்புக்கிடமானது: ராகுல்காந்தி பேச்சு

2018-06-14@ 13:32:48

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி உடற்பயிற்சி செய்யும் காட்சியை வெளியிட்டுள்ளது நகைப்புக்கிடமாக உள்ளது எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். உடலைக் கட்டுக்கோப்புடன் வைத்திருப்பது குறித்த வீடியோவை இணையத்தில் பதிவிட்ட கிரிக்கெட் வீரர் விராட் கோலி, பிரதமர் நரேந்திர மோடி தனது உடல்தகுதியை மெய்ப்பிக்க வேண்டும் என சவால் விடுத்தார். இதையடுத்துப் பிரதமர் பல்வேறு பயிற்சிகள் செய்யும் காட்சிகள் இணையத்தில் வெளியிடப்பட்டன.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள ராகுல்காந்தி, பிரதமர் உடற்பயிற்சி செய்வது நகைப்புக்குரியதாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த இப்தார் விருந்தில் கலந்துகொண்ட அவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் எச்சூரியும் இதேபோல் உடற்பயிற்சி வீடியோவை வெளியிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • militaryparangimalai

    ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்

  • guwahatidiadhani

    குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

  • koreanwarmeet

    கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

  • srilankakitefestival

    இலங்கையில் பட்டம் திருவிழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டங்களுடன் பங்கேற்பு

  • studendsrussiachennai

    ரஷ்யா மற்றும் ஹங்கேரி கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்ற கூடங்குளம் மாணவர்கள் சென்னை திரும்பினர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்