SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீலகிரியில் அரசு பேருந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

2018-06-14@ 13:20:46

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அருகே அரசுப் பேருந்து 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் உதகையில் இருந்து குன்னூர் நோக்கி 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. மந்தடா என்ற இடத்தில் பேருந்து சென்ற போது சாலையில் பள்ளம் இருப்பதைக் கவனித்த ஓட்டுநர் வலதுபுறமாக திருப்பியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மலைப்பாதையில் இருந்து கவிழ்ந்து உருண்டு 100 அடி பள்ளத்தில் விழுந்து நொறுங்கியது. பேருந்துக்குள் இருந்த பயணிகள் தூக்கி வீசப்பட்டனர்.

இந்த கோர விபத்தில் பயணிகள் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. பேரிடர் மீட்புக் குழுவினரும், தீயணைப்புத்துறையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். காயம் அடைந்தவர்கள் உதகை மற்றும் கோவை அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்