SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தருமபுரி அருகே ரயில்பாதைக்குக் கீழே சுரங்கப்பாதை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை

2018-06-14@ 12:55:06

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ரயில்பாதைக்குக் கீழே சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சேலம் - தருமபுரி - பெங்களூர் ரயில் பாதையில் மாரண்டஅள்ளி - பாலக்கோடு இடையே ஜோதிஅள்ளி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ரயில்பாதையைக் கடந்துதான் பாலக்கோட்டுக்குச் சென்றுவர வேண்டியுள்ளது.

பள்ளி மாணவர்களும் பொதுமக்களும் ரயில் எப்போது வரும் என்பது தெரியாமலேயே அச்சத்துடன் பாதையைக் கடந்து செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும் கால்நடைகளை வளர்ப்போரும் அச்சத்துடனேயே ரயில் பாதையைக் கடந்து செல்கின்றனர். இந்த கிராமமக்கள் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்ல வேண்டும் என்றால் 3 கி.மீ தொலைவுக்குச் சுற்றித்தான் செல்லவேண்டும். இதனால் வாகனங்களில் செல்வோரும் நடந்து செல்வோரும் அச்சமின்றிச் செல்ல  வசதியாக ரயில்பாதைக்குக் கீழே ஒரு சுரங்கப்பாதை அமைக்க தர வேண்டும் என்பது பொதுமக்களின்  கோரிக்கை ஆகும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • guwahatidiadhani

    குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

  • koreanwarmeet

    கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

  • srilankakitefestival

    இலங்கையில் பட்டம் திருவிழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டங்களுடன் பங்கேற்பு

  • studendsrussiachennai

    ரஷ்யா மற்றும் ஹங்கேரி கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்ற கூடங்குளம் மாணவர்கள் சென்னை திரும்பினர்

  • 21-08-2018

    21-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்