SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் ஒரு வாரத்தில் 6அடி உயர்வு

2018-06-14@ 12:50:11

பொள்ளாச்சி: மேற்குதொடர்ச்சி மலையில் தொடரும் தென்மேற்கு பருவமழையால், பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் கடந்த ஒரு வாரத்தில் 6அடி உயர்ந்துள்ளது என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். பொள்ளாச்சியை அடுத்த டாப்சிலிப் அருகே உள்ள பரம்பிக்குளம் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர்,  கான்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணை மற்றும் ஆழியார் அணைக்கு செல்கிறது.  ஆனால், இந்த ஆண்டில் ஜனவரி முதல் ஏப்ரல் துவக்கம் வரை மழை இல்லாததால், பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் வரத்து சொற்ப அளவிலே இருந்தது. மே மாதத்தில் கோடைமழை ஓரளவு இருந்தும், அந்நேரத்தில் அணைக்கு தண்ணீர் வரத்து என்பது எதிர்பார்த்த அளவில் இல்லை.

இதன்காரணமாக மொத்தம் 72அடி கொண்ட அணையின் நீர்மட்டம் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வரை 7அடியாக இருந்தது.  அதிகபட்சமாக வினாடிக்கு 150கனஅடி தண்ணீரே வந்து கொண்டிருந்தது. கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைபகுதியில் தொடர்ந்து பெய்துவரும் பருவமழையால், பரம்பிக்குளம் அணைக்கு நீர் வரத்து வழக்கத்தைவிட அதிகரிக்க துவங்கியது. இதில் நேற்றைய நிலவரபடி, பரம்பிக்குளம் பகுதியில் 60மில்லி மீட்டர் என்ற அளவில் மழைப்பதிவாகியுள்ளது. வினாடிக்கு 2014கன அடிவீதம் தண்ணீர் வரத்து இருந்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 13.50அடியாக உயர்ந்துள்ளது என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்