SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

களக்காடு அருகே செங்களாகுறிச்சி கால்வாயில் இரண்டு இடங்களில் உடைப்பு : குளங்கள் நிரம்புவதில் சிக்கல், விவசாயிகள் பாதிப்பு

2018-06-14@ 12:49:30

களக்காடு: களக்காடு அருகே செங்களாகுறிச்சி கால்வாயில் இரு இடங்களில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் குளங்களுக்கு தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. களக்காடு அருகே உள்ள மலையடிபுதூர் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து செங்களாகுறிச்சி கால்வாய் செல்கிறது. பொதுப்பணித்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கால்வாய் மூலம் செங்களாகுறிச்சி குளம், வடுகச்சிமதில் குளம், புலியூர்குறிச்சி குளம், திருவரங்கநேரி குளம், சோழன்குளம் உள்பட 10க்கும் மேற்பட்ட  குளங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் மூலம் அப்பகுதியில் உள்ள 600 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. கடந்த சில நாட்களாக களக்காடு, திருக்குறுங்குடி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் களக்காட்டில் ஓடும் ஆறுகள் மற்றும் கால்வாய்களில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதேபோல் செங்களாகுறிச்சி கால்வாயிலும் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் கீழசேனி, நடுசேனி பகுதியில் 2 இடங்களில் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் வழியாக தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது. இதையடுத்து குளங்களுக்கு தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது.  இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். செங்களாகுறிச்சி கால்வாய் உடைப்புகளை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.  ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் கால்வாயில் இதே இடங்களில் உடைப்பு ஏற்பட்டிருந்தது.

மணல் மூட்டைகள் அடுக்கி தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. இதனை நிரந்தரமாக சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் பொதுப்பணித்துறையினர் இதனை கண்டுகொள்ளவேயில்லை. இந்நிலையில் கால்வாயில் ஏற்பட்ட வெள்ளத்தால் அதே இடங்களில் மீண்டும் கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. உடைப்பின் வழியாக தண்ணீர் வெளியேறி அருகில் உள்ள தெற்கு மாவடியை சேர்ந்த விவசாயி அண்ணத்துரைக்கு சொந்தமான விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை மூழ்கடித்தபடி ஓடுகிறது. கால்வாய் உடைந்து வெள்ளம் புகுந்ததால் விளைநிலங்களில் மண் மேடு ஏற்பட்டுள்ளது. பெரிய, பெரிய கற்களும் விளைநிலங்களுக்குள் குவிந்துள்ளது. இவைகளும்
அகற்றப்படவில்லை.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்