SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவாரூர் அருகே திருமணமான 2 வாரத்தில் மனைவியை நண்பர்களுக்கு பரிசளித்த கொடூர கணவன்

2018-06-14@ 12:11:49

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே திருமணமான 2 வாரத்தில் கணவனின் அனுமதியுடன் அவரது நண்பர்களால் புதுப்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செட்டிமூலையைச் சேர்ந்தவர் விவசாயி  தலைக்காடு கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவருக்கு கடந்த மாதம் 25-ம் தேதி திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு பிறந்த வீட்டில் விருந்து முடித்து, புகுந்த வீடு திரும்பியுள்ளார். பின்னர் ராஜேந்திரன் குமாரியின் நகையை வாங்கி அடமானம் வைத்து மது அருந்தியுள்ளார். இரவு 11 மணியளவில் தனது இரண்டு நண்பர்களின் வீட்டிற்கு அழைத்துசென்று அங்கேயே அவரை விட்டுவிட்டு வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அங்கு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட புதுப்பெண்  இரவு 2 மணியளவில் வீடு திரும்பியுள்ளார். அவரை ராஜேந்திரன் விடியவிடிய தாக்கியுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து குடும்பத்திற்கு தெரியவர அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில்  திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக புதுப்பெண் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன் இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் பெண்ணின் குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் தலைமறைவாக உள்ள கணவன் ராஜேந்திரனையும் அவரது நண்பர்களையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thiruvan_5thdaycelb

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 5 ஆம் நாள்: விநாயகர், சந்தரசேகரர் மாட வீதியில் பவனி

  • rarephots_indiragandhi

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரிய புகைப்படங்கள்!

  • 2018_indiragandibirthdy

    இரும்பு பெண்மணி இந்திரா காந்தியின் 101 வது பிறந்த தினம்: தலைவர்கள் மரியாதை!

  • america_winterstorm2018

    வடகிழக்கு அமெரிக்க பகுதிகளில் தொடங்கியுள்ள முதல் பனிப்புயல்!

  • 2018wildfire_trumph

    கலிபோர்னியா காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்