SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தீர்ப்பு சாதகமாக வந்தால் மதியமே சட்டப்பேரவைக்கு செல்வோம் : தங்கத்தமிழ்ச்செல்வன் பேட்டி

2018-06-14@ 11:59:10

சென்னை : எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு 100% எங்களுக்கு சாதகமாக வரும் என்று தங்கத்தமிழ்ச்செல்வன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தீர்ப்பு சாதகமாக வந்தால் மதியமே சட்டப்பேரவைக்கு செல்வோம் என்று கூறியுள்ளார். எங்களுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் நான் மட்டும் மேல்முறையீடு செய்யமாட்டேன் என தங்கத்தமிழ்ச்செல்வன் பேட்டியளித்துள்ளார். நீதிமன்றத்தின் மீது முழு நம்பிக்கை உள்ளது, நீதிமன்றத்தை மதிக்கிறோம் என்றும் அவர் கூறினார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் தொகுதிக்கு சென்று மக்களை சந்திக்க முடியாத சூழல் ஏற்பட்டது. கட்சி தாவல் அடிப்படையில் தங்களை தகுதிநீக்கம் செய்யவில்லை என்றும் இடைத்தேர்தல் வந்தால் சந்தித்து 18 பேரும் மீண்டும் வெற்றி பெறுவோம் என்றும் உறுதிப்பட அவர் தெரிவித்தார். இடைத்தேர்தலில் 18 பேரில் ஒருவர் வெற்றிபெறாவிட்டாலும் மற்ற 17 பேரும் ராஜினாமா செய்வோம் அந்த அளவிற்கு ஒற்றுமையாக உள்ளோம். கொறடா உத்தரவை மீறிய ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம் செய்யப்படவில்லை. மேலும் எங்களை அதிமுகவில் இருந்து ஏன் தங்களை நீக்கவில்லை என தங்கத்தமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்