SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 126 புள்ளிகள் சரிவு

2018-06-14@ 10:52:10

மும்பை: இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 126 புள்ளிகள் சரிந்து காணப்பட்டது. கடந்த மூன்று நாள் வர்த்தகத்தில் குறியீடு 295.49 புள்ளிகளாக உயர்ந்துள்ளதையடுத்து, இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 126.09 புள்ளிகள் சரிந்து 35,613.07 புள்ளிகளாக உள்ளது. ஐ.டி, பொதுத்துறை நிறுவனம், எண்ணெய் மற்றும் எரிவாயு, டெக், வங்கி மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற நிறுவன பங்குகள் விலை குறைந்திருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 35.95 புள்ளிகள் குறைந்து 10,820.75 புள்ளிகளாக உள்ளது.

விப்ரோ, ஆக்சிஸ் வங்கி, டிசிஎஸ், என்டிபிசி, எஸ்.பி.ஐ., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி, அதானி துறைமுகம், கோல் இந்தியா, ஆசிய வர்ணங்கள், கொடக் பாங்க், இண்டஸ்ஐண்ட் பாங்க், ஹீரோ மோட்டோ கார்ப் மற்றும் எல் அண்ட் டி, போன்ற நிறுவன பங்குகள் விலை 1.08% வரை சரிந்து காணப்பட்டது.

ஆசியாவின் இதர பங்குச்சந்தையான, சீனாவின் ஷாங்காய் கூட்டுக் குறியீடு 0.28%, ஹாங்காங்கின் ஹாங் செங் 0.75% மற்றும் ஜப்பான் நாட்டின் நிக்கேய் 0.47% சரிந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் அமெரிக்க டவ் ஜோன்ஸ் தொழிற்துறை சராசரியாக 0.47% வரை குறைந்து முடிந்தது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • fifa_fans123

    உலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்!

  • whatsapp_police11

    வாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்

  • manila_fire_accident

    மணிலாவில் இந்த ஆண்டு இதுவரை 2,200 தீ விபத்து... முடிவற்ற போரில் சிக்கி தவிக்கு தீயணைப்பு வீரர்களின் படதொகுப்பு!

  • vivsayigal_8valisaalai11

    8 வழிச்சாலைகாக கையகப்படுத்தும் நிலத்தை அளவிடும் பணி : வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு கதறும் விவசாய குடும்பத்தினர்

  • Hogenakkalparisalagain

    ஒகேனக்கல்லில் மீண்டும் களைகட்டிய பரிசல் சவாரி : உற்சாகத்தில் சுற்றுலாப் பயணிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்