SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிமுக, பாஜக அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்- ஸ்டாலின் வேண்டுகோள்

2018-06-14@ 09:14:38

சென்னை: சென்னை கொளத்தூர் தொகுதியில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு  தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின், ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்களுக்கு லுங்கி, சட்டை, புடவைகள் மற்றும் பிரியாணி அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். மேலும், 25  பள்ளி மற்றும் கல்லூரி மாணவ - மாணவியருக்கு கல்வி உதவித் தொகை, இரண்டு முதியோருக்கு உதவித் தொகை, காது கேட்கும் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். தமிழகத்தில் தற்போது நடந்து கொண்டு இருக்கிற ஆட்சி மக்களை பற்றி கவலைப்படாத ஆட்சியாக உள்ளதாக ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.மக்கள் பிரச்சனை குறித்து சட்டமன்றத்தில் பேச அனுமதி கிடைப்பதில்லை என்றும் ஸ்டாலின் புகார் கூறினார். மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்க  அனைவரும் ஒற்றுமையோடு இணைந்து செயல்பட வேண்டும் என்றும் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • militaryparangimalai

    ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்

  • guwahatidiadhani

    குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

  • koreanwarmeet

    கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

  • srilankakitefestival

    இலங்கையில் பட்டம் திருவிழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டங்களுடன் பங்கேற்பு

  • studendsrussiachennai

    ரஷ்யா மற்றும் ஹங்கேரி கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்ற கூடங்குளம் மாணவர்கள் சென்னை திரும்பினர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்