SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதல் ஒருநாள் போட்டி : ஆஸ்திரேலியாவை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து

2018-06-14@ 07:04:24

லண்டன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச்-டிராவிஸ் ஹெட் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இங்கிலாந்து அணி பந்து வீச்சில் ஆஸ்திரேலியா அணி திணறியது. அதைத்தொடர்ந்து மேக்ஸ்வெல்-அஷ்டன் அகார் ஆகியோர் நிதானமாக ரன் சேர்த்தனர். இறுதியில் 47 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 214 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 62, அஷ்டன் அகார் 40 ரன்கள் எடுத்தனர்.

இங்கிலாந்து அணியில் சிறப்பாக பந்துவீசிய மொயின் அலி, லியாம் பிளங்கீட் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், ரஷித் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் களமிறங்கினர். ராய் 2-வது பந்திலேயே டக்-அவுட் ஆனார். அதைத்தொடர்ந்து வந்த அலெக்ஸ் ஹேல்ஸ் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து அணி சற்று தடுமாறியது. அடுத்து வந்த ஜோ ரூட்- இயான் மார்கன் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

இறுதியில் 44 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா அணியில் பில்லி ஸ்டான்லேக், மைக்கெல் நிசர், ஆண்ட்ரூ டை ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 50, இயான் மார்கன் 69 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து அணியின் மொயின் அலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

  • balore_arrrres1

    சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

  • gasa_vanvali111

    காசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்