SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பீதியில் விவசாயிகள், பொதுமக்கள் வீடு,வீடாக சென்று மிரட்டும் போலீஸ்

2018-06-14@ 00:52:33

சேலம்: சேலம் - சென்னை 8வழி பசுமை சாலைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை போலீசார், வீடு வீடாகச் சென்று மிரட்டி வருகின்றனர். இதே போல், கிராமங்களில் உளவுத்துறையினர் முகாமிட்டு, கண்காணித்து வருவது விவசாயிகள் மற்றும் பொதுமக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.  இதுகுறித்து பாதிக்கப்படும் கிராம மக்கள் கூறியதாவது: பசுமைவழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படும் 5 மாவட்டங்களிலும் மக்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்காக யாருடைய தயவும் இல்லாமல், அவர்களே ஒரு குழுவாக இணைந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 9ம்தேதி, இந்த போராட்டத்ைத முடக்கும் வகையில், அதிகாலையில் விவசாயிகளின் வீடுகளுக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அனைத்து மாவட்டங்களிலும் விசாரணை என்ற பெயரில், 25 கிலோமீட்டர் தூரமுள்ள ேபாலீஸ் ஸ்டேஷன்களுக்கு அழைத்துச்சென்றனர். இதில் முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்தில் சுமார் 10 பேரை அழைத்துச் ெசன்றனர். இதில் முத்துக்குமார், மாரிமுத்து என்ற 2 விவசாயிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதன்பிறகு போலீசார் தினமும் ஒரு பட்டியலை வைத்துக் கொண்டு வீடு, வீடாகச் சென்று விசாரிக்கின்றனர். இதே போல் உளவுத்துறை போலீசாரும், கிராமங்களில் முகாமிட்டு தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதனால், கடந்த ஒருவாரமாக நல்லது, ெகட்டது என்ற எந்த நிகழ்ச்சிக்கும் கூட்டமாக செல்ல முடியவில்லை. கிராமத்து தெருக்களில் வழக்கம் போல் நின்று பேசினால் கூட, அங்கு சாதாரண உடையில் நடமாடும் உளவுத்துறை போலீசார், துருவி துருவி கேள்வி கேட்கின்றனர். உங்களை பின்னால் இருந்து இயக்குபவர்கள் யார்? என்ற கேள்வியே அவர்களிடம் பிரதானமாக இருக்கிறது. போலீசாரின் இந்த   நடவடிக்கைகள் அனைவருக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.  இவ்வாறு கிராம மக்கள் தெரிவித்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • fifa_fans123

  உலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்!

 • whatsapp_police11

  வாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்

 • manila_fire_accident

  மணிலாவில் இந்த ஆண்டு இதுவரை 2,200 தீ விபத்து... முடிவற்ற போரில் சிக்கி தவிக்கு தீயணைப்பு வீரர்களின் படதொகுப்பு!

 • vivsayigal_8valisaalai11

  8 வழிச்சாலைகாக கையகப்படுத்தும் நிலத்தை அளவிடும் பணி : வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு கதறும் விவசாய குடும்பத்தினர்

 • Hogenakkalparisalagain

  ஒகேனக்கல்லில் மீண்டும் களைகட்டிய பரிசல் சவாரி : உற்சாகத்தில் சுற்றுலாப் பயணிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்