SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

8 வழி பசுமைச்சாலை திட்டத்தால் பரிதவிக்கும் பழங்குடி மக்கள்: ஆக்கிரமிப்பாளர்கள் என துரத்தும் அதிகாரிகள்

2018-06-14@ 00:50:49

சேலம்: சேலம் - சென்னை 8வழி பசுமை விரைவுச்சாலை திட்டத்தால், தங்களது வாழ்க்கையே திசை மாறும் அவலம் ஏற்பட்டுள்ளதாக, பழங்குடியின மக்கள் ேவதனை ெதரிவித்துள்ளனர். சேலத்தில் இருந்து சென்னைக்கு ₹10 ஆயிரம் கோடியில், 8வழி பசுமை விரைவு சாலை அமைக்கும் திட்டத்திற்கான ஆயத்த பணிகளை, தமிழக அரசு தொடங்கியுள்ளது. தங்களது வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த திட்டத்தை, எந்த சூழலிலும் ஏற்க மாட்டோம் என்று விவசாயிகளும், கிராம மக்களும் தொடர்ந்து ேபாராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த திட்டத்தால் பாதிக்கப்படும் பழங்குடியின மக்களை யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் பாதிக்கும். ஆனால், எங்களுக்கோ வாழ்க்கையே திசை மாறிவிடும் என்று பரிதவித்து நிற்கின்றனர் பழங்குடியின மக்கள். இதுகுறித்து பழங்குடியினர் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது:

8வழி பசுமை விரைவுச்சாலை திட்டத்தால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் பழங்குடி மக்கள் தான். சேலத்தில் இருந்து சென்னை வரை, 277 கிலோ மீட்டர் தொலைவில் இந்த சாலை அமைகிறது. இதில் தர்மபுரி மாவட்டத்தில் மஞ்சவாடியில் தொடங்கி திருவண்ணாமலை மாவட்டத்தின் மீட்புத்துறை வரை, சுமார் 56 கிலோ மீட்டர் பகுதிகளில் மலைவாழ் மக்கள் என்னும் பழங்குடிகள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வன உரிமைச் சட்டத்தை, தமிழக அரசு முழுமையாக செயல்படுத்தவில்லை.

 இதனால் வனத்துறையினரின் கடுமையான கெடுபிடிகளுக்கு மத்தியில், சிறிய அளவிலான நிலங்களில் விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். ஆனால், அந்த நிலத்தின் உரிமைக்கான  சான்றுகள், பெரும்பாலான பழங்குடி மக்களிடம் இல்லை. இதனால், அவர்களுக்கு எந்தவித இழப்பீடும் கிடைக்க வாய்ப்பில்லை. இது போன்ற நிலங்களும் தற்ேபாது பசுமை வழிச்சாலை திட்டத்திற்காக அழிக்கப்படுகிறது. பழங்குடி மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று பட்டியலிட்டு, அங்கிருந்து துரத்தவே அதிகாரிகள் முனைப்பு காட்டி வருகின்றனர்.  ஏற்கனவே சலுகைகள் முழுமையாக கிடைக்காமலும், வேலை வாய்ப்புகளுக்கு வழியில்லாமலும் பழங்குடி மக்கள் திண்டாடி வருகின்றனர்.

ஆந்திராவில் செம்மரக்கடத்தல் சம்பவங்களில், அதிகளவில் கைது செய்யப்படுபவர்கள் சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த பழங்குடிகளாகவே உள்ளனர். இந்த நிலையில், பசுமை வழி சாலை அமைப்பதற்காக, பழங்குடிகளை அவர்களின் வசிப்பிடங்களில் இருந்து துரத்தியடிக்கும் போது, வாழ்க்கையே திசை மாறும் அவலம் ஏற்படும்.  எனவே, தமிழக அரசு, இதை கருத்தில் கொண்டு பசுமை சாலையால் பாதிக்கப்படும் பழங்குடியினரின் மறுவாழ்வுக்கு, தகுந்த உத்திரவாதம் அளிக்க வேண்டும். இவ்வாறு பழங்குடிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறினர்.

திருவண்ணாமலையில் நிலம் அளவை பணி துவக்கம்
சென்னை- சேலம் வரை 8 வழி பசுமைச் சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கான தொடக்கப்பணி கடந்த வாரம் சேலத்தில் எதிர்ப்பை மீறி நடந்தது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகாவில் நேற்று நில அளவை பணிகள் தொடங்கியது. அதன்படி, நெடுஞ்சாலை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் செங்கம் அடுத்த நீப்பத்துறை கிராமத்தில் நேற்று ஆரம்ப கட்ட பணிகளை மேற்கொண்டனர். நீப்பத்துறை கிராமத்தில் தொடங்கி, கலசபாக்கம் பகுதியில் இணைக்கும் வகையில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, நில அளவை பணிகளுக்கு பொதுமக்கள் இடையூறு செய்வதை தவிர்க்க, 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-08-2018

  22-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • birdfestivalcanada

  கனடாவில் வான்கூவர் நகரில் நடைபெற்ற பறவை திருவிழாவில் பறவைகள் போல உடையணிந்து தன்னார்வலர்கள் பங்கேற்பு

 • militaryparangimalai

  ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்

 • guwahatidiadhani

  குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

 • koreanwarmeet

  கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்