SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இன்ஸ்பெக்டர் திட்டியதால் பெண் போலீஸ் தற்கொலை முயற்சி: கடலூரில் பரபரப்பு

2018-06-14@ 00:43:33

கடலூர்: கடலூரில் ஆயுதப்படை பெண் போலீஸ், இன்ஸ்பெக்டர் திட்டியதாகக்கூறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வருபவர் சவிதா(27). இவரது கணவர் சத்தியசீலன்(35). இவரும் ஆயுதப்படையில் பணியாற்றி வருகிறார். இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். 2 குழந்தைகள் உள்ளது. கடலூர் புதுக்குப்பத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
சவிதா காவல்துறையில் உள்ள வானொலி தகவல் பிரிவில் கடந்த சில நாட்களாக பணியில் இருந்துள்ளார். அவ்வப்போது பிற பாதுகாப்பு பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். இதற்கிடையே குழந்தைகளின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பணியில் விடுப்பு மற்றும் கடலூரிலேயே இருக்கும் வகையில் பணி அளிக்க வேண்டும் என்று உயர் அதிகாரிகளிடம் கூறிவந்தார். சவிதாவுக்கு உரிய பணி ஒதுக்கீடு கிடைக்காததால் மனமுடைந்து நிலையில் காணப்பட்டார். மேலும் பணி விடுப்பு உள்ளிட்டவை தொடர்பாக ஆயுதப்படையின் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் திட்டியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று சவிதாவுக்கு நீதிமன்ற பாதுகாப்பு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆணையை பெற்ற நிலையில் நீதிமன்றத்துக்கு அவர் செல்லவில்லை. வீட்டுக்கு சென்ற சவிதா மனஉளைச்சல் காரணமாக விஷம் குடித்துள்ளார்.மயங்கிய நிலையில் கிடந்த சவிதாவை பார்த்த அக்கம், பக்கத்தினர் மீட்டு, கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்கொலை முயற்சிக்கு முன்பு அவர் எழுதிய 3 பக்க கடிதம் போலீசாரிடம் சிக்கியது. புதுநகர் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஐஜி தர் விளக்கம்: போலீஸ் துறை என்றாலே பணி சுமைதான். எனவே பணி சுமை என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-08-2018

    20-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-08-2018

    19-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-08-2018

    18-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lastfinaldest111

    21 குண்டுகள் முழங்க தங்க நாற்கர சாலையின் நாயகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாயின் உடல் தகனம்

  • finaldesti000

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்