SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அறிவு பரம்பரையாக வருவது கிடையாது: ராகுல் மீது ஜெட்லி பாய்ச்சல்

2018-06-14@ 00:41:38

புதுடெல்லி: பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வரும் ராகுல் காந்திக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ‘அறிவு பரம்பரையாக வருவது கிடையாது’ என அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமூக வலைதளங்கள் மூலமாகவும், பொது கூட்டங்களிலும் பாஜ மற்றும் பிரதமர் நரேந்திரமோடியை கடுமையாக விமர்சித்து கருத்து கூறி வருகிறார். சில தினங்களுக்கு முன் பேசிய ராகுல், பாஜ தலைமையிலான அரசு, பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரூ.2.5 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்திருப்பதாக கூறினார். இதன் மூலமாக முத்ரா யோஜனா திட்டத்தை அவர் விமர்சித்தார். மேலும், கோககோலா நிறுவனர் ஷிகான்சி எனப்படும் லெமன் ஜூஸ் விற்றதாகவும், மெக்டொனால்ட் நிறுவனர் தாபா நடத்தியதாகவும் அவர் மேற்கோள் காட்டியிருந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் மற்றும் ராகுலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ‘காங்கிரஸ் கட்சியில் சிந்தாந்தம் குறைந்து வருகிறதா? மோடியை எதிர்ப்பது தான் மட்டும்தான் கொள்கையா? என்ற தலைப்பில் மத்திய அமைச்சர் அருண் ெஜட்லி தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவில், ‘காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம் குறைந்து வருகின்றது. ஏனென்றால் அதன் மனதில் புகுந்துள்ள ஒரே ஒரு நபர் நரேந்திர மோடி மட்டும் தான். 2008ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது கடனை செலுத்தாத 15 பேருக்கு வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. அதனை தற்போது நேர்மாறாக கூறுகிறார்கள். வங்கியின் செயல்பாடு மற்றும் அதன் அடிப்படை நடைமுறையை புரிந்துகொள்ள முடியாத ஒரு தேசிய கட்சியின் தலைவர் குறித்து அந்த கட்சியும் கவலைப்பட வேண்டும், நாடும் கவலைப்பட வேண்டும். குடும்ப வழி கட்சிகளில் அரசியல் பதவிகள் என்பது பரம்பரையானது. துரதிஷ்டவசமாக அறிவை பரம்பரையாக பெற முடியாது. கற்பதன் மூலமாகதான் அறிவை பெற முடியும்’ என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-06-2018

  23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • chennai_protest123

  நீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது

 • cleanesttrainPurityIndia

  ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா

 • fifa_fans123

  உலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்!

 • whatsapp_police11

  வாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்