SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆக்ராவில் சாலை சீரமைப்பின் போது நாய் மீது தார் ஊற்றி ரோடு ரோலரை ஏற்றி கொலை செய்த கொடூரம்

2018-06-14@ 00:22:10

* சமூக வலைதளங்களில் மக்கள் கொதிப்பு
* போலீசார் வழக்கு பதிந்து விசாரணை

ஆக்ரா: சாலை சீரமைப்பின் போது தூங்கிக் கொண்டிருந்த நாய் ஒன்றின் மீது தார் ஊற்றி உயிரோடு நசுக்கி கொன்ற சம்பவம், விலங்குகள் நல ஆர்வலர்கள் மட்டுமின்றி பொதுமக்களை கொதிப்படைய செய்துள்ளது. ஆக்ராவின் பூல் சாயித் கிராசிலிருந்து சர்கியூட் ஹவுஸ் நோக்கி தாஜ்மகால் பகுதி வரை நேற்று முன்தினம் தார் சாலை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, சீரமைப்பு பணி நடைபெற்ற சாலையின் ஓரத்தில் நாய் ஒன்று தூங்கி கொண்டிருந்தது. அந்த நாயை அங்கிருந்து அப்புறப்படுத்தவோ, அல்லது விரட்டவோ யாரும் முயற்சிக்கவில்லை என தெரிகிறது. மாறாக, தூங்கி கொண்டிருந்த அந்த நாயின் மீது கொதிநிலையில் இருந்த தாரை தெளித்தனர். பின்னர் ரோடு ரோலர் அந்த நாயின் உடலின் ஒருபகுதி மீது ஏறி இறங்கியது. இதில், அந்த நாயின் பாதி உடல் தார் சாலைக்கு புதைந்தது. இதனால் வலி தாங்க முடியாத அந்த நாய் ஊளையிட்டு அபாய குரல் எழுப்பியும், அவற்றை சாலையில் பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள் யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. இதனால் சம்பவ இடத்திலயே அந்த நாய் தனது உயிரைவிட்டது.

இந்த சம்பவம் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியது. பாதி புதையுண்ட நிலையில் இறந்துகிடந்த அந்த நாயின் புகைப்படத்தை பலரும் ஷேர் செய்து தங்களது கோபத்தை வெளிபடுத்தி வருகின்றனர். அதோடு, இதனால் கோபமடைந்த அந்தபகுதிவாழ் மக்கள் மட்டுமின்றி பல்வேறு தொண்டு நிறுவனங்களை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர்கள் ஒன்று திரண்டு,  நாயை இரக்கமின்றி கொன்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி சர்தார் போலீஸ் நிலையம் எதிரே கோஷமிட்டனர். மேலும், விபத்து ஏற்பத்திய ரோலர் வண்டியை சிறைபிடித்த மக்கள், சாலை ஒப்பந்ததார் மீது போலீசரில புகார் அளித்தனர் இதையடுத்து போலீசார் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த நாயின் உடல் பொக்லைன் இயந்திரம் கொண்டு அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

சித்ரவதையின் உச்சம்
இந்த சம்பவம் பற்றி வேதனை தெரிவித்த விலங்குகள் நல ஆர்வலர் ஆனந்த் ராய் என்பவர், “இது சித்ரவதையின் உச்சம்” என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். மற்றொரு பதிவர், வீடியோவை பார்த்தது முதல் தனக்கு பேச்சு வரவில்லை என புலம்பியுள்ளார். பலரும், தவறு செய்தவர்கள் மீது விலங்குகள் வதை சட்டத்தின்கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

‘தண்டனை நிச்சயம்’
“இதுபோன்ற உணர்ச்சியற்ற மனிதர்களை என்ன செய்வது? இந்த உலகம் எங்கே போய் கொண்டிருக்கிறது? இந்த படுபாதகச் செயலை செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும்” என மூத்த பத்திரிகையாளர் சுனாயன் சதுர்வேதி கவலை தெரிவித்தார். இதனிடையே, சாலை ஒப்பந்தத்தை எடுத்துள்ள ஒப்பந்தாரர் கூறுகையில், இந்த செயலில் ஈடுபட்டவர் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. அவரை அடையாளம் கண்டு நிச்சயம் தண்டனை பெற்று தருவோம் என்றார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-06-2018

  23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • chennai_protest123

  நீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது

 • cleanesttrainPurityIndia

  ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா

 • fifa_fans123

  உலகக் கோப்பை கால்பந்து போட்டி: முகத்தில் வர்ணம் பூசி உற்சாகமாக கண்டுகளிக்கும் ரசிகர்கள்!

 • whatsapp_police11

  வாட்ஸ் அப் வதந்திகளை நம்பாதீர் : தண்டோரா போட்டு பிரச்சாரம் செய்யும் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சல்யூட்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்