SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தங்கம் விலை உயர்வு

2018-06-14@ 00:22:07

புதுடெல்லி: 2 நாள் சரிவுக்கு பின் நேற்று தங்கம் விலை ரூ.150 உயர்ந்தது. உலகளாவிலான மாற்றம், உள்ளூர் நகை வியாபாரிகள், வர்த்தகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் தங்கம் வாங்கி குவிக்க ஆர்வம் காட்டியது உள்ளிட்ட காரணங்களால், இரு நாள் சரிவுக்கு பின் நேற்று தங்கம் விலை உயர்ந்தது. டெல்லியில் சுத்த தங்கத்தின் விலை ரூ.150 அதிகரித்து 10 கிராம் ரூ.31,950க்கு விற்பனை செய்யப்பட்டது.

எனினும் ஆபரண தங்கத்தின் (8 கிராம்) விலை எவ்வித மாற்றமின்றி முந்தைய நாள் விலையான ரூ.24,800க்கு விற்கப்பட்டது. வெள்ளி உலோகத்தையும் தொழில் நிறுவனங்கள் வாங்கி செல்ல முன்வராததால் நேற்று அதன் விலை ரூ.10 குறைந்து, கிலோ ரூ.41,550க்கு விற்பனையானது. வாரச்சந்தையிலும் இதனை விலை ரூ.40 குறைந்து கிலோ ரூ.40,620க்கு விற்கப்பட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்