SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மூலப்பொருள், டீசல் விலை உயர்வால் ரோஜா செடி விலை கிடுகிடு

2018-06-14@ 00:20:07

தேன்கனிக்கோட்டை: பெட்ரோல், டீசல் விலை உயர்வால், ரோஜா செடிகளின் விலையை உற்பத்தியாளர்கள் உயர்த்தியுள்ளனர்.கிருஷ்ணகிரி  மாவட்டம் தளி பகுதியில், ரோஜா செடி உற்பத்தி பிரதானமாக உள்ளது. இங்குள்ள  அகலக்கோட்டை, செட்டிப்பள்ளி, ஜவளகிரி, பாலதோட்டனப்பள்ளி பகுதியில்  வீட்டுக்கு ஒரு நர்சரி என 2 ஆயிரம் ரோஜா செடி வளர்த்து விற்பனை செய்யும் நர்சரிகள்  உள்ளன. செடி வளர்க்க பயன்படுத்தப்படும் செம்மண், பூச்சி  மருந்து, டிஏபி உரம், மூலப்பொருட்கள் போன்றவற்றின் விலை உயர்வால் செடி வளர்ப்பு தொழில் நஷ்டத்திற்குள்ளாகி வருகிறது. இந்த சூழ்நிலையில் ஜிஎஸ்டியால் பிளாஸ்டிக் கவரின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு செடி 2 முதல் 5 ரூபாய் வரையில் விலை  உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அகலக்கோட்டை நர்சரி உரிமையாளர்கள் கூறுகையில்,  ‘ஜிஎஸ்டியால் பிளாஸ்டிக் கவர் விலை உயர்வு, வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை காரணமாக ரோஜா செடி விலை உயர்ந்துள்ளது’ என்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

  • balore_arrrres1

    சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

  • gasa_vanvali111

    காசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி

  • hondu_aaas1

    அதிக வறுமை, ஊழல் நிலவும் ஹோண்டுராஸ் நாட்டில் இருந்து சுமார் 1,500 குடியேறிகள் அமெரிக்கா நோக்கி பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்