SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நம்பர் 1 இந்திய அணியுடன் ஆப்கானிஸ்தானுக்கு ‘முதல் டெஸ்ட்’ : பெங்களூருவில் இன்று தொடங்குகிறது

2018-06-14@ 00:15:34

பெங்களூரு: இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டி, பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று  காலை 9.30க்கு தொடங்குகிறது. டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் முன்னணி அணிகளுக்கே சவால் விடுக்கும் வகையில் சிறப்பாக விளையாடி  வரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சமீபத்தில் டெஸ்ட் அந்தஸ்து வழங்கியது. இதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் அணி  தனது வரலாற்று சிறப்புமிக்க முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியுடன் மோதுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்திய அணியுடன் கற்றுக்குட்டியான ஆப்கானிஸ்தான் மோதும் இந்த போட்டி,  பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது. கேப்டன் விராத் கோஹ்லிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணி  அஜிங்க்யா ரகானே தலைமையில் களமிறங்குகிறது. முன்னணி பந்துவீச்சாளர்கள் புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பூம்ராவுக்கும் இந்த போட்டியில்  விலக்களிக்கப்பட்டுள்ளது.

காயம் காரணமாக விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா இடம் பெறாத நிலையில், அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார். 2010ம்  ஆண்டுக்குப் பிறகு மீண்டும் டெஸ்ட் போட்டியில் விளையாட கிடைத்துள்ள இந்த வாய்ப்பை கார்த்திக் நன்கு பயன்படுத்திக் கொள்வார் என  எதிர்பார்க்கலாம். தவான், விஜய், புஜாரா, லோகேஷ் ராகுல், கேப்டன் ரகானே, கார்த்திக், ஹர்திக் என்று மிக வலுவாக அமைந்துள்ள இந்திய பேட்டிங்  வரிசை ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும்.

இஷாந்த், உமேஷ், ஹர்திக் வேகமும், அஷ்வின், ஜடேஜா அல்லது குல்தீப் சுழலை சமாளிக்க வேண்டிய இக்கட்டான நிலையில் ஆப்கன்.  பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அதே சமயம், சமீபத்தில் வங்கதேசத்துடன் நடந்த டி20 தொடரில் ஹாட்ரிக் வெற்றியுடன் ஒயிட்வாஷ் செய்து அசத்தியதால்  ஆப்கன். வீரர்கள் மிகுந்த உற்சாத்துடன் டெஸ்டில் களமிறங்குகின்றனர். அந்த அணி இளம் சுழற்பந்துவீச்சாளார்கள் ரஷித் கான் (19 வயது), முஜீப் உர்  ரகுமான் (17 வயது) இருவரையும் பெரிதாக நம்புகிறது.

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக அசத்திய ரஷித் கான், டி20 போட்டிகளுக்கான பவுலர்கள் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது  குறிப்பிடத்தக்கது. டி20ல் 4 ஓவர் மட்டுமே பந்துவீசும் அவர், டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சுக்கு 30-40 ஓவர் வீச வேண்டிய நெருக்கடிக்கு  ஈடுகொடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். முஜீப் உர் ரகுமான் இதுவரை 4 நாள் போட்டியில் கூட விளையாடியதில்லை என்பது  குறிப்பிடத்தக்கது.

அனுபவம் இல்லாவிட்டாலும் கடுமையாகப் போராடும் முனைப்புடன் உள்ள ஆப்கன். வீரர்களை அலட்சியம் செய்வது ஆபத்து என்பதை இந்திய  வீரர்களும் நன்கு உணர்ந்துள்ளனர். அதிலும், இந்திய அணி அடுத்து கடினமான இங்கிலாந்து சுற்றுப்யணத்தை எதிர்நோக்கி உள்ள நிலையில், இந்த  போட்டி ரசிகர்களின் ஆவலை வெகுவாக அதிகரித்துள்ளது. மொத்தத்தில் நம்பர் 1 அணியுடன் கற்றுக்குட்டி மோதும் இந்த டெஸ்ட் போட்டி மிக  சுவாரசியமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்தியா: அஜிங்க்யா ரகானே (கேப்டன்), ஷிகர் தவான், முரளி விஜய், செதேஷ்வர் புஜாரா, கே.எல்.ராகுல், கருண் நாயர், தினேஷ் கார்த்திக் (விக்கெட்  கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஷர்துல் தாகூர், நவ்தீப் சாய்னி, ஆர்.அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ்.

ஆப்கானிஸ்தான்: அஷ்கர் ஸ்டானிக்சாய் (கேப்டன்), முகமது ஷாஷத், ஜாவேத் அகமதி, ரகமத் ஷா, இசானுல்லா ஜனத், நசீர் ஜமால், ஹஷ்மதுல்லா  ஷாகிதி, அப்சர் ஸஸாய், முகமது நபி, ரஷித் கான், ஜாகிர் கான், ஆமிர் ஹம்சா ஹோட்டக், சையது அகமது ஷிர்ஷத், யாமின் அகமத்ஸாய் வாபதார்,  முஜீப் உர் ரகுமான்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 22-01-2019

  22-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • annauniv

  அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

 • jammukashmir

  ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

 • TulipflowerDay

  நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

 • womesrally

  வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்