SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கர்நாடகாவில் இருந்து வரத்து குறைவு இஞ்சி மூட்டைக்கு ரூ.1,500 வரை அதிகரிப்பு: கிலோ ரூ.100க்கு விற்பனை

2018-06-14@ 00:14:42

சேலம்: கர்நாடகாவில் இருந்து வரத்து குறைந்ததால், இஞ்சி விலை மூட்டைக்கு ₹1,500 அதிகரித்துள்ளது. சில்லரை விற்பனையாக கிலோ ₹100க்கு விற்கின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள மொத்த காய்கறி மார்க்கெட்களுக்கு, கர்நாடக மாநிலத்தில் இருந்து மிக அதிகளவு இஞ்சி விற்பனைக்கு வருகிறது. தற்போது, கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளிலும், மைசூர், ஹசன் போன்ற இடங்களிலும் தெடர்ந்து தென்மேற்கு பருவமழை பெய்கிறது. இதன்காரணமாக இஞ்சி அறுவடை வெகுவாக பாதிக்கப்பட்டு, தமிழகத்திற்கு இஞ்சி வரத்து குறைந்துள்ளது. சேலம் வஉசி காய்கறி மார்க்கெட்டிற்கு, வழக்கமாக தினமும் 500 முதல் 1000 மூட்டை (தலா 58 கிலோ) இஞ்சி வரத்து இருக்கும்.

ஆனால், கடந்த 20 நாட்களாக வரத்து பெரிதும் குறைந்து, 100 மூட்டை அளவிற்கு மட்டுமே இஞ்சி வருகிறது. இதனால், விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ஒரு மூட்டை (58 கிலோ) இஞ்சி விலை ₹2,100 முதல் ₹2,500 வரை விற்கப்பட்டது. நேற்றைய தினம் ஒரு மூட்டை இஞ்சி விலை ₹3,800 ஆக இருந்தது. மூட்டைக்கு ₹1,500 வரை அதிகரித்துள்ளது.  விலை ஏற்றத்தின் காரணமாக, சில்லரை விற்பனை விலையும் கடுமையாகியுள்ளது. ஒரு கிலோ இஞ்சி ₹80 முதல் ₹100 வரை விற்கப்பட்டது. சில்லரை வியாபாரிகளும், பொதுமக்களும் மார்க்கெட்டிற்கு வந்து அதிக விலை கொடுத்து இஞ்சியை வாங்கிச் செல்கின்றனர். இன்னும் 20 நாட்களுக்கு இந்த விலையேற்றம் நீடிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • militaryparangimalai

    ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்

  • guwahatidiadhani

    குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

  • koreanwarmeet

    கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

  • srilankakitefestival

    இலங்கையில் பட்டம் திருவிழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டங்களுடன் பங்கேற்பு

  • studendsrussiachennai

    ரஷ்யா மற்றும் ஹங்கேரி கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்ற கூடங்குளம் மாணவர்கள் சென்னை திரும்பினர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்