SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சில்லி பாயின்ட்...

2018-06-14@ 00:14:29

* 2026ம் ஆண்டு பிபா உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரை கனடா, அமெரிக்கா, மெக்சிகோ நாடுகள் இணைந்து நடத்த உள்ளன.
* உலக கோப்பை போட்டித் தொடர் தொடங்க உள்ள நிலையில், ஸ்பெயின் அணியின் தலைமை பயிற்சியாளார் ஜுலன் லோபடிகுயி நீக்கப்பட்டுள்ளார்.  ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளராக இருந்த ஜினடின் ஜிடேனுக்கு பதிலாக ஜுலன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியான  நிலையில், இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விளையாட்டு இயக்குனர் பெர்னாண்டோ ஹையரோ ஸ்பெயின் அணியின் பயிற்சியாளராக  செயல்பட உள்ளார்.
* குயின்ஸ் கிளப் டென்னிஸ் தொடரில் இருந்து விலகுவதாக நம்பர் 1 வீரர் ரபேல் நடால் அறிவித்துள்ளார்.
* ஸ்டட்கர்ட் ஏடிபி மெர்சிடிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஷ்வரன் 7-6  (8-6), 2-6, 6-3 என்ற செட் கணக்கில் உலகின் 23வது ரேங்க் வீரர் டெனிஸ் ஷபோவலாவை (கனடா) வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார்.
* அயர்லாந்து மகளிர் அணியுடன் டப்ளினில் நேற்று நடந்த ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து அணி 50 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 440 ரன்  குவித்தது. அந்த அணியின் 17 வயது இளம் வீராங்கனை அமேலியா கேர் ஆட்டமிழக்காமல் 232 ரன் (145 பந்து, 31 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி  சாதனை படைத்தார். மகளிர் ஒருநாள் போட்டியில் எடுக்கப்பட்ட அதிகபட்ச தனிநபர் ஸ்கோராக இது அமைந்தது. லெய் கேஸ்பரெக் 113 ரன் அடித்தார்.
* ஸ்பெயின் அணியுடன் நேற்று நடந்த ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி 0-3 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • babyballon_trump

    பேபி பலூனில் அதிபர் டிரம் முகம் : அமெரிக்க அதிபரை விமர்சித்து வினோத பரப்புரை

  • 22-10-2018

    22-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்