SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குளத்தூர் பகுதியில் விலையில்லாததால் சோடை போகும் குண்டு மிளகாய்: விவசாயிகள் கவலை

2018-06-14@ 00:13:27

குளத்தூர்: குளத்தூர் பகுதியில் விலையில்லாததால் இருப்பு வைத்த குண்டு மிளகாய் சோடை போவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அரசு சார்பில் குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டுமென விவசாயிகள்  வலியுறுத்தி உள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான முத்துராமலிங்கபுரம், த.சுப்பையாபுரம், வீரபாண்டியபுரம், வேடநத்தம், சக்கம்மாள்புரம், பனையூர், வேப்பலோடை, வைப்பார், புளியங்குளம், பூசனூர் என 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த பல வருடங்களுக்கு முன்பு பருத்தி, கம்பு, நெல், சோளம் விதைத்த நிலங்களில் கால மாற்றத்தால் குண்டு மிளகாய், வெங்காயம் சகுபடிக்கு விவசாயிகள் மாறினர். தொடர்ந்து தற்போது சில ஆண்டுகளாக மிளகாய் விளைச்சலும் இப்பகுதியில் சரிவர இல்லாமல் விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிச்சமாக உள்ளது.

 கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் மழை இல்லாததால் விவசாயம் செய்ய வழியின்றி  நிலங்கள் புழுதிக்காடாய் காட்சியளித்தது. கடந்த வருடம் குளத்தூர் மற்றும் அதன் அருகிலுள்ள முத்துராமலிங்கபுரம், பனையூர், புளியங்குளம் கிராம பகுதியில் ஓரளவு பரவலாக மழை பெய்ததால் அப்பகுதி விவசாயிகள் விதைத்த குண்டு மிளகாய் ஓரளவு நன்றாக விளைச்ச கிடைந்தது. ஆரம்ப காலகட்டத்தில் குண்டு மிளகாய் வத்தல் ஒரு குவிண்டால் ₹14 ஆயிரம் முதல் ₹15 ஆயிரம் வரை விலை போனது. ஆனால் தற்போது  ஒரு குவிண்டால் ₹7 ஆயிரமாக குறைந்து விட்டது. இதனால் விவசாயிகள் மற்றும் சிறு வியாபாரிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில் குண்டு வத்தலை இருப்பு வைப்பதற்கு குளிர்பதன வசதியில்லாததால் மிளகாய் வத்தல் கருப்பு வண்ணமாக மாறி சோடை போகிறது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்குள்ளாகி கவலை அடைந்துள்ளனர்.

 இதுகுறித்து சிறு வியாபாரி கெங்குமணி கூறியதாவது: குளத்தூரையொட்டியுள்ள கிராமங்களில் 2 ஆண்டிற்கு பிறகு பரவலாக மழை பெய்ததில் குண்டு மிளகாய் விளைச்சல் நன்றாக உள்ளது. ஆரம்ப கட்டத்தில் வத்தல் அதிக விலைக்கு சென்ற நிலையில் தற்போது வெளிமாநிலங்களில் இருந்து வரத்துள்ளதால் விலை பாதிக்கு மேல் குறைந்துள்ளது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் இருப்பு வத்தலாக வைத்துள்ளனர். இருப்பு வத்தலும் அதிக நாட்கள் வைத்திருக்க முடியாமல் சோடைபோய் விலைக்கு எடுக்க முடியாத நிலையில் காணப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டமே ஏற்பட்டுள்ளது. விளாத்திகுளம் பகுதியில் அரசு சார்பில் வத்தல் குளிர்பதன கிடங்கு அமைத்தால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் சிறு வியாபாரிகள் பயனடைவர்’ என்றார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-06-2018

    19-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lari_petrol11

    டீசல், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

  • volcano_erimalai1

    467 வீடுகளை விழுங்கிய பிறகும் பசி அடங்காத எரிமலைக் குழம்பின் ஆக்ரோஷம்: நெஞ்சை பதறவைக்கும் படங்கள்

  • macedonia_makkal1

    நாட்டின் பெயரை மாற்றிதை கண்டித்து மாசிடோனியா மக்கள் போராட்டம் : வன்முறையை ஒழிக்க கண்ணீர் புகைக்குண்டு வீச்சு

  • thiruchi_kaarmegam1

    திருச்சியில் மலைத்தொடர் போன்று வானில் நீளமாக திரண்ட கார்மேகக் கூட்டங்களின் ரம்மியமான காட்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்