SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சாப்ட்வேர் ஊழல் : அமெரிக்காவில் இந்தியர் தொழில் செய்ய தடை ;ரூ.47 கோடி அபராதம்

2018-06-14@ 00:12:49

நியூயார்க்: இந்திய டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்களுடன் சேர்ந்து ஊழல் செய்ததால், அமெரிக்கா வாழ் இந்தியருக்கு நிரந்தர தொழில் தடையும், ரூ.47  கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. அமெரிக்காவில் ஜீனியஸ் டெக்னாலஜிஸ் என்ற பெயரில் கம்ப்யூட்டர் தொழில்நுட்ப சேவைகளை வழங்கி வந்தவர்  பரம்ஜித் சிங் பிரார். அமெரிக்க வாடிக்கையாளர்கள் இந்தியாவில் டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்கள் நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியை செய்து  கொடுத்தார். இதன் மூலம் அமெரிக்க வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்ட இந்திய டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்கள், பிரபல சாப்ட்வேர்  நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி, உங்கள் கம்ப்யூட்டர் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. நாங்கள் பாதுகாப்பு சாப்ட்வேர்  இன்ஸ்டால் செய்து தருகிறோம் என கூறுவர். இதற்கு சம்மதிக்கும் வாடிக்கையாளர்களின் கம்ப்யூட்டர்களில் ரிமோட் அக்சஸ் மூலம் மிகவும்  பழமையான பாதுகாப்பு சாப்ட்வேர்களை இன்ஸ்டால் செய்து பணம் பெற்றுள்ளனர்.  

இந்த மோசடியை அமெரிக்க வர்த்தக கமிஷன் கண்டுபிடித்து பரம்ஜித் சிங் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வழக்கு தொடர்ந்தது.
 இதில் பரம்ஜித் சிங், அமெரிக்காவில் கம்ப்யூட்டர் தொழில்நுட்ப சேவைகளை வழங்க நிரந்தர தடை விதிக்கப்பட்டது. அவருக்கு ரூ.47 கோடி  அபராதமும் விதிக்கப்பட்டது. இதை செலுத்த பரம்ஜித் சிங் ஒப்புக் கொண்டார். ஒரு பகுதியை செலுத்தினால் மீதமுள்ள அபராத தொகை ரத்து  செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. எனவே, இந்த தொகையை செலுத்த பரம்ஜித் ஒப்புக் கொண்டுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-01-2019

    18-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • rivermoon

    வடகிழக்கு அமெரிக்காவில் நிலவின் மேற்பரப்பை போல உறைந்து காணப்படும் ஆற்றின் நடுப்பகுதி!

  • ParadeREhearsalRepublicDay

    டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையின் கண்கவர் புகைப்படங்கள்

  • alanganalloor_kaalaigal11

    வீரத்துடன் சீறி பாயும் காளைகள்.. மெர்சல் காட்டும் காளையர்கள்... உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திருவிழா

  • NairobiHotelAttack

    மும்பை பாணியில் கென்யா ஓட்டலில் நடத்தப்பட்ட பயங்கர தாக்குதல்: இதுவரை 21 பேர் உயிரிழப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்