SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெளிமாநில உயர்ரக மாம்பழ வரத்தால் உள்ளூர் விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம்

2018-06-14@ 00:12:04

கோபால்பட்டி: வெளிமாநிலங்களில் இருந்து உயர்ந்த ரக மாம்பழங்கள் அதிகளவில் வருவதால், உள்ளூர் மாம்பழங்களின் விலை சரிந்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.முக்கனிகளில் ஒன்றான மா, திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி, நத்தம் பகுதிகளில் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சாணார்பட்டி ஒன்றியத்தில் அஞ்சுகுழிப்பட்டி, வேம்பார்பட்டி, கன்னியாபுரம், விடி.பட்டி, சிலுவத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மா அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. இங்கிருந்து தமிழகம் முழுவதும் மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் போதிய மழை இல்லாததால் மூன்றில் ஒரு பங்கு மா மரங்கள் பட்டுப்போயின. இதனால் மீதம் உள்ள மரங்களை விவசாயிகள் பராமரித்து வந்தனர்.சீசன் துவங்கி 3 வாரங்கள் ஆன நிலையில் மாம்பழங்களின் விலை படிப்படியாக குறைந்து தற்போது ஒரு டன் மாம்பழம் ரூ.5 ஆயிரம் ரூ.6 ஆயிரம் வரையே விற்பனையாகிறது. சில்லரையில் கிலோ ரூ.20 விற்று வந்த மாம்பழங்கள் தற்போது ஒரு கிலோ ரூ.7 முதல் ரூ.10 வரையே விற்பனையாகிறது. இதனால் மாம்பழங்கள் அறுவடை செய்யும் கூலி கூட கிடைக்காததால் விவசாயிகளுக்கு பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மா, தென்னை விவசாய சங்கத்தலைவர் கண்ணுமுகமது கூறுகையில், ‘‘இம்முறை மா சீசன் துவங்கியபோதே மாம்பழங்களின் விலை உயர்ந்தது. தற்போது ஆந்திராவில் இருந்து உயர்ரக மாம்பழங்களான இமாம்பசந்த், அல்போன்சா, பங்கனபள்ளி உள்ளிட்டவை அதிகளவு தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகின்றன. இதனால் இங்கு விளையும் மாம்பழங்களுக்கு போதிய விலை கிடைக்காததால், லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் விலை குறைவால் மா விவசாயிகள் அறுவடை செய்யாமல் மாங்காய்களை மரங்களிலே விட்டுள்ளனர். இதனால் குடோன்களுக்கு வரத்தும் குறைந்துள்ளது. மா விவசாயிகளை காப்பாற்ற தமிழக அரசு குளிர்பதன கிட்டங்கி அமைக நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.வெளிமாநில வரத்துக்கு அதிகம் கிராக்கி போதிய மழை இல்லாததால் உள்ளூர் மாம்பழங்கள் அதிக திரட்சி இல்லாமல் உள்ளது. ஆனால் ஆந்திர வரத்து மாம்பழங்கள் அதிக நீர்சத்து, திரட்சியுடன் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் ஆந்திர வரத்து மாம்பழங்களையே அதிகளவில் வாங்கி செல்வதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • militaryparangimalai

    ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்

  • guwahatidiadhani

    குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

  • koreanwarmeet

    கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

  • srilankakitefestival

    இலங்கையில் பட்டம் திருவிழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டங்களுடன் பங்கேற்பு

  • studendsrussiachennai

    ரஷ்யா மற்றும் ஹங்கேரி கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்ற கூடங்குளம் மாணவர்கள் சென்னை திரும்பினர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்