SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

5 ஆண்டுகளில் இல்லாத வகையில் காஷ்மீரில் இந்தாண்டு அதிக பிஎஸ்எப் வீரர்கள் உயிரிழப்பு

2018-06-14@ 00:11:56

புதுடெல்லி: காஷ்மீரில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத வகையில், இந்த ஆண்டு அதிகமான எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உயிர்  இழந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சர்வதேச எல்லைப் பகுதிகள் மற்றும் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு  பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் மற்றும் தீவிரவாதிகள் தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத  வகையில், இந்த ஆண்டு மட்டும் அதிக எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்த ஆண்டு  இதுவரை நடத்தப்பட்டுள்ள 320 தாக்குதல்களில் 24 பாதுகாப்புப் படையினர் உள்பட 50 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட 111 தாக்குதல்களில் 2 பிஎஸ்எப் வீரர்கள் உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்தனர். இதேபோல், கடந்த 2016ல் நடத்தப்பட்ட  204 தாக்குதல்களில் 3 பிஎஸ்எப் வீரர்கள் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர். 2015ல் 350 தாக்குதல் சம்பவங்களில் ஒரு பிஎஸ்எப் வீரர் உயிரிழந்த  நிலையில், 2014ல் 127 தாக்குதல்களும் அதில் 2 வீரர்களும் உயிரிழந்ததாகவும் அந்த தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத  வகையில், இந்த ஆண்டில் 6 மாதத்திற்குள்ளாகவே அதிகமான தாக்குதல் சம்பவங்களும், அதிகமான வீரர்கள் உயிரிழப்பும் நடந்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ல் ரஸ்தம், கடந்த ஆண்டில் அர்ஜூன் மற்றும் நடப்பு ஆண்டில் பீம் போன்ற சிறப்பு தாக்குதல் நடவடிக்கைகளை  பிஎஸ்எப் மேற்கொண்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்