SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரூ.9,000 கோடி கடனில் சிக்கி தவிக்கும் ருசி சோயா நிறுவனம் ஏலம் அதானி, பதஞ்சலி போட்டி

2018-06-14@ 00:11:03

மும்பை, ஜூன் 14: கடனில் சிக்கி தவிக்கும் ருசி சோயா நிறுவனத்தை ஏலத்தில் எடுக்க அதானி, பதஞ்சலி குழுமம் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
நியூட்ரிலா சோயா மற்றும் சமையல் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனமான ருசி சோயா நிறுவனத்திற்கு ரூ.9,000 கோடி கடன் உள்ளது. இதை அடைக்க, இந்நிறுவனத்தை ஏலத்தில் விட  தீர்மானிக்கப்பட்டது. இதற்காக, ருசி சோயா நிறுவனம் சுவிஸ் முறையில் ஏலத்தில் விட தீர்மானித்தது. இந்த நிறுவனத்தை ஏலத்தில் எடுக்க அகமதாபாத்தை சேர்ந்த அதானி குழுமத்தின் மற்றொரு அங்கமான சிங்கப்பூரை சேர்ந்த வேளாண்மை நிறுவனம் அதானி வில்மர் மற்றும் யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் இடையே கடும் போட்டி நிலவியது. இது தொடர்பான முதல் கட்ட ஏலம் கடந்த செவ்வாய்கிழமை நடந்தது. இந்த ஏலத்தில் ருசி சோயா நிறுவனத்தை அதானி வில்மர் நிறுவனம் ரூ.6,000 கோடிக்கு ஏலம் கேட்டிருந்தது. இது போல் பதஞ்சலி நிறுவனம் ரூ.5700 கோடிக்கு ஏலத்தில் கேட்டுள்ளது. இந்த நிறுவனம் யார் கைக்கு செல்லும் என்பது இன்னும் முடிவாகவில்லை.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்