SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதிய பள்ளி சீருடை துணிகள் தட்டுப்பாடு: விலை உயர்வால் பெற்றோர் அதிர்ச்சி

2018-06-14@ 00:09:45

ஈரோடு: புதிய பள்ளி சீருடை துணிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு விலையும் அதிகரித்துள்ளதால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில்  உள்ள அரசு பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலும் இதேபோல 9ம்  வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் பயிலும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு புதிய  சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அரசின் சார்பில் 2 செட் இலவச  சீருடை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான  பள்ளிகளில் ஒரு செட் சீருடை மட்டுமே மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள சீருடைகளை வெளியில் கடைகளில் மாணவர்கள் வாங்கிக்கொள்ள வேண்டும்.  இந்நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்டு 2 வாரங்கள் நிறைவடைந்துவிட்ட நிலையில்  புதிய சீருடையில்தான் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று ஆசிரியர்கள்  கட்டாயப்படுத்துவதால் கடைகளில் பள்ளிச் சீருடை துணிகளுக்கு கடும் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது. இந்த தட்டுப்பாட்டினை பயன்படுத்தி ஒரு சில ஜவுளி கடைகளில்  கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக பெற்றோர்களும், வியாபாரிகளும்  குற்றம் சாட்டி உள்ளனர். இதுகுறித்து ஈரோடு ஜவுளி சந்தை வியாபாரிகள் சங்க  முன்னாள் தலைவர் செல்வராஜ் கூறியதாவது:

அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான  பழைய சீருடை துணிகள் அதிக அளவில் இருப்பு உள்ளது. ஆனால் தமிழக அரசு சமீபத்தில்  சீருடை மாற்றம் செய்து புதிய சீருடைகளை அறிமுகப்படுத்தியது. ஜிஎஸ்டி,  நூல் விலையேற்றம், தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் புதிய  சீருடை துணிகள் தேவையான அளவு உடனடியாக உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ஈரோடு ஜவுளி சந்தையில் உள்ள கடைகளுக்கான பள்ளி சீருடை துணிகள் பெரும்பாலும்  மும்பையில் இருந்து தான் அதிக அளவில் வருகிறது. கடந்த சில நாட்களாக  மும்பையில் கடும் மழை பெய்து வருவதால் ஜவுளி பார்சல் வருவது  தடைப்பட்டுள்ளது. இதனால் பள்ளி சீருடை துணிகளுக்கு ஜவுளி சந்தையில் கடும்  தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஜவுளி சந்தையில் ஒரு செட் பள்ளி சீருடை துணி ரூ.350  முதல் அதிகபட்சம் ரூ.700 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில்  தட்டுப்பாட்டினை காரணம் காட்டி வெளியில் தற்போது ரூ.700 முதல் ரூ.850 வரை  விற்பனை செய்யப்படுகிறது. பள்ளிக்கு புதிய சீருடையில்தான் வர வேண்டும் என்று ஆசிரியர்கள்  கட்டாயப்படுத்தப்படுவதால் வேறு வழியின்றி கூடுதல் விலை கொடுத்து  பெற்றோர்கள் வாங்கி செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். புதிய  சீருடை துணிகளுக்கு தட்டுப்பாடு உள்ளதால் மாணவர்களுக்கு சிறிது கால அவகாசம்  கொடுக்க வேண்டும். இவ்வாறு செல்வராஜ் கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்