SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாகர்கோவில் மேல ரத வீதியில் ஆக்கிரமிப்பால் புதைந்து போன அடிபம்பு: கமிஷனர் கவனிப்பாரா?

2018-06-13@ 21:39:20

நாகர்கோவில்: நாகர்கோவில் நாகராஜா கோயில் மேலரத வீதியில் ஏராளமான கடைகள், வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள் மற்றும் குடியிருப்புகளும் உள்ளன. இந்த பகுதியில் உள்ள கழிவுநீர் ஓடைகள் சீரமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. தனியார்கள் சிலர் கழிவு நீர் ஓடையை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டி உள்ளன. சாதாரண மழைக்கே மேலரத வீதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நிலை உள்ளது. மேலும் தனியார் வாகனங்களும் இந்த சாலையை ஆக்கிரமித்து, நாசப்படுத்தி வருவதாக மேலரத வீதி பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் இங்கு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக நகராட்சி சார்பில் அடிபம்பு (போர்வெல்) உள்ளது.

நிலத்தடி நீர் மட்டம் நல்ல நிலையில் உள்ளது. இந்த போர்வெல் மூலம் பொதுமக்கள் குடி தண்ணீர் எடுத்து வந்தனர். ஆனால் தற்போது இந்த அடிபம்பை யாரும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. தனியார்கள் ஆக்கிரமிப்பால் அடிபம்பு புதைந்து போய் உள்ளது. ஆங்காங்கே ஆக்கிரமிப்புகளை அகற்றி கட்டிடங்களை இடித்து தள்ளும் ஆணையர் சரவணக்குமார், இது போன்று ஆக்கிரமிப்பில் இருக்கும் கழிவுநீர் ஓடைகள் மற்றும் அடிபம்புகளையும் மீட்டெடுத்து மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என மேல ரத வீதி  பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • militaryparangimalai

    ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்

  • guwahatidiadhani

    குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

  • koreanwarmeet

    கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

  • srilankakitefestival

    இலங்கையில் பட்டம் திருவிழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டங்களுடன் பங்கேற்பு

  • studendsrussiachennai

    ரஷ்யா மற்றும் ஹங்கேரி கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்ற கூடங்குளம் மாணவர்கள் சென்னை திரும்பினர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்