SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு பரிவர்த்தனை கட்டணம் கிடையாது: ஐஆர்சிடிசி அறிவிப்பு

2018-06-13@ 21:28:43

லக்னோ: ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு டெபிட் கார்டு பயன்படுத்துவோரிடம் இனி பரிவர்த்தனை கட்டணம்  வசூலிக்கப்பட மாட்டாது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ரயிலில் டிக்கெட் எடுக்க இணையதளத்தில் முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை அதிகம். தினமும் லட்சக்கணக்கானோர் ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்கின்றனர். முன்பதிவுக்கான கட்டணத்தை டெபிட், கிரிடிட் கார்டு மூலம் செலுத்தும்போது, பரிவர்த்தனை கட்டணமாக குறிப்பிட்ட தொகை வங்கிகள் மூலம் பிடித்தம் செய்யப்படுகின்றன. கிரிடிட் கார்டுகளுக்கு பரிவர்த்தனை கட்டணமாக 1.8 சதவீதமும், டெபிட் கார்டுகளுக்கு அந்தந்த வங்கிகள் நிர்ணயம் செய்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

டிஜிட்டல் பரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்கப்படுத்தி வரும் நிலையில், ரயில் முன்பதிவுக்கு பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்க கூடாது என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். இதை கருத்தில் கொண்டு முன்பதிவு செய்வோரிடம் பரிவர்த்தனை கட்டணம் எதுவும் வசூலிக்க கூடாது என வங்கிகளுக்கு ஐஆர்சிடிசி கடிதம் எழுதியது. இந்நிலையில், டெபிட், இ-வாலட் மூலம் முன்பதிவு செய்வோரிடம் பரிவர்த்தனை கட்டணம் வசூலிப்பதை வங்கிகள் நிறுத்தியுள்ளன. இது ரயில் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • militaryparangimalai

    ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்

  • guwahatidiadhani

    குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

  • koreanwarmeet

    கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

  • srilankakitefestival

    இலங்கையில் பட்டம் திருவிழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டங்களுடன் பங்கேற்பு

  • studendsrussiachennai

    ரஷ்யா மற்றும் ஹங்கேரி கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்ற கூடங்குளம் மாணவர்கள் சென்னை திரும்பினர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்