SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவானைக்காவல் ரயில்வே பாலம் ஆகஸ்ட் முதல் வாரத்தில் திறப்பு

2018-06-13@ 21:25:32

திருச்சி: திருச்சி திருவானைக்காவல் பெரியார் நகரில் ரூ.47 கோடியில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் ராஜாமணி இன்று ஆய்வு செய்தார்.  பின்னர் அவர் அளித்த பேட்டி: 4.7.2014ல் பாலம் கட்டும் பணி துவங்கியது. பாலம் கட்டுவதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு நிவாரணமாக வழங்க ரூ.78 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பாலப்பணி 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் பாலம் திறக்கப்படும். சப்வே கட்டுமான பணிக்கு ஜூலை 20ல் டெண்டர் விடப்படும்.
ஜங்ஷன் ரயில்வே மேம்பாலத்தை பொறுத்தவரை திண்டுக்கல், கிராப்பட்டி ஆகிய இடங்களில் இருந்து வானங்களில் வருவோர் பாலத்தை பயன்படுத்த வசதியாக ஜூலை முதல் வாரத்தில் பாலம் திறக்கப்படும்.

ராணுவத்திடமிருந்து நிலத்தை கைப்பற்றிய பின் சென்னை- மதுரை வழித்தட வாகனங்கள் செல்ல வசதியாக பாலவேலை நடைபெறும். பஞ்சப்பூர் ரிங் ரோடு பணி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை பெற்று இன்னும் 4 மாதத்தில் தொடங்கப்பட உள்ளது. கள்ளிக்குடி மார்க்கெட்டில் கடைகள் அமைக்க 1,638 வியாபாரிகளிடம் விண்ணப்பம் பெறப்பட்டது. இதில் முதல்கட்டமாக 330 பேருக்கு கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் கள்ளிக்குடி மார்க்கெட் முழுமையான பயன்பாட்டுக்கு வரும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்