SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருச்சி மாவட்ட கிராமங்களில் நடமாடும் சட்ட விழிப்புணர்வு பயணம்

2018-06-13@ 21:05:38

திருச்சி: தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படியும் தமிழ்நாடு மாநில சட்டபணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதல்படியும் நடமாடும் சட்ட விழிப்புணர்வு வாகனம்  தமிழகம் முழுவதும் சட்ட விழிப்புணர்வு பயணம் செய்து வருகின்றது. திருச்சி மாவட்டத்தில்  கடந்த 11ம் தேதி முதல் 16ம் ேததி வரை சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் திருச்சியில் உள்ள கிராமங்களுக்கு சென்று சட்ட விழிப்புணர்வு பற்றிய துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து வருகின்றது. இதனை மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மேலும் அந்த வாகனம் இன்று  துறையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும், நாளை(14ம்தேதி) லால்குடி, மற்றும்  அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும், 15ம்தேதி முசிறி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும், 16ம் தேதி மணப்பாறை அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று சட்ட விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்யும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்