SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பஸ்சில் 25 பவுன் அபேஸ் தப்பியோடிய பெண்ணை பயணிகள் விரட்டி பிடித்தனர்

2018-06-13@ 20:57:03

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத் நகரை சேர்ந்த ராஜகோபால் மனைவி ஆனந்தவள்ளி(35). மகளுடன் நேற்று நாகையில் இருந்து முத்துப்பேட்டைக்கு அரசு பஸ்சில் வந்தபோது அருகில் அமர்ந்திருந்த ஒரு பெண், ஆனந்தவள்ளியின் கைப்பையில் இருந்த பர்சை திருடிக்கொண்டு, சங்கேந்தி அருகே பஸ்சிலிருந்து இறங்கினார்.அப்போது கைப்பையிலிருந்த பர்ஸ் மாயமானதை கண்டு கூச்சலிட்ட ஆனந்தவள்ளி, அதில் 25 பவுன் நகை மற்றும் பணம் இருப்பதாக கூறினார். இதனால் டிரைவர் பஸ்சை நிறுத்தினர். அதிலிருந்து இறங்கிய பயணிகள் சிறிது தூரத்தில் சென்ற அந்த பெண்ணை பார்த்தனர். பஸ் நிறுத்தப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த அவர் ஓட துவங்கினார். ஆனால் பயணிகள் அவரை விரட்டி பிடித்து எடையூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர், விருதுநகர் பாண்டி நகரை சேர்ந்த முருகன் மனைவி வள்ளி(52) என்பது தெரியவந்தது. கைப்பையை போலீசார் சோதனையிட்டபோது ஆனந்தவள்ளியின் 25 பவுன் நகை மற்றும் பணம் ஆகியவற்றுடன், வேறு நபர்களிடம் திருடிய காலி பர்ஸ்கள், ஆதார் கார்டுகள், மேலும் சில தங்க நகைகள் இருந்தன. ஆனந்தவள்ளியின் நகைகளை அவரிடம் ஒப்படைத்த போலீசார், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து வள்ளியை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-01-2019

    15-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • MakarSankrantiFestival

    வட மாநிலங்களில் பெண்கள் கோலாகலமாக கொண்டாடிய மகர சங்கராந்தி பண்டிகை

  • 14-01-2019

    14-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 13-01-2019

    13-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 12-01-2019

    12-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்