SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் 2வது நாளாக விடிய விடிய சோதனை போலீஸ் அதிரடி வேட்டையில் 564 பேர் கைது

2018-06-13@ 20:47:19

சென்னை: தொடர் வழிப்பறி சம்பவங்கள் எதிரொலியாக சென்னை முழுவதும் 2ம் நாள் நடத்தப்பட்ட அதிரடி வாகன சோதனையில் முக்கிய குற்றவாளிகள் உட்பட 564 பேரை போலீசார் கைது செய்தனர்.  சென்னையில் கத்திமுனையில் தொடர் வழிப்பறி சம்பவங்களை தொடர்ந்து இரவு நேரங்களில் பொதுமக்கள் தனியாக நடந்து செல்ல முடியாத சூழல் நிலவியது. இதையடுத்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி கூடுதல் கமிஷனர்கள் ஜெயராம், சாரங்கன் தலைமையில் கடந்த இரண்டு நாட்களாக 2 ஆயிரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதல் நாளான நேற்று முன்தினம் போலீசார் நடத்திய வாகன சோதனையில் தலைமறைவு குற்றவாளிகள் உட்பட 3,081 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சோதனை இரண்டாவது நாளாக நேற்றும் நீடித்தது. இதில் சந்தேகத்தின் பேரில் 442 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகள் 20 பேரும், தலைமறைவு குற்றவாளிகள் 7 பேரும், 109,110 பிரிவின் கீழ் 95 பேர் என மொத்தம் 564 ேபரை போலீசார் கைது செய்தனர். மேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த 53 பேரையும் போலீசார் பிடித்து அபராதம் விதித்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • birdfestivalcanada

    கனடாவில் வான்கூவர் நகரில் நடைபெற்ற பறவை திருவிழாவில் பறவைகள் போல உடையணிந்து தன்னார்வலர்கள் பங்கேற்பு

  • militaryparangimalai

    ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்

  • guwahatidiadhani

    குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

  • koreanwarmeet

    கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

  • srilankakitefestival

    இலங்கையில் பட்டம் திருவிழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டங்களுடன் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்