SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 147 கிலோ எடை கொண்ட பெண்ணுக்கு ஆபரேசன் மூலம் 23 கிலோ அகற்றம்

2018-06-13@ 20:25:11

தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் முதல்முறையாக பெண்ணின் உடலில் இருந்த 23 கிலோ கூடுதல் சதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.தூத்துக்குடி மினிசகாயபுரத்தைச் சேர்ந்தவர் தாமஸ். கடல் தொழிலாளியான இவரது மனைவி செல்வி (50). இவரது உடல் எடை கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துக் கொண்டே சென்று 147 கிலோவாக ஆனது. இதனால் அவரால் நடக்கவோ, அமரவோ, எழுந்து செல்லவோ கூட முடியாத நிலையில் அவதிப்பட்டு வந்தார்.இதற்காக குடும்பத்தினர் அவருக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் உடல் எடையை குறைக்க முடியவில்லை. இந்நிலையில் செல்வி சிகிச்சைக்காக கடந்த ஏப்ரல் மாதம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் குழுவினர் இதனை ஒரு சவாலாக ஏற்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்து உடல் எடையை குறைக்கவும், தேவையற்ற சதைகளை எடுக்கவும் முடிவு செய்தனர். இதனையடுத்து கடந்த ஏப்ரல் 19ம் தேதி செல்விக்கு சிறப்பு அறுவை சிகிச்சை நடந்தது. இதில் டீன் லலிதா, உறைவிட மருத்துவ அதிகாரி டாக்டர் சைலஸ் ஜெபமணி ஆகியோரது மேற்பார்வையில் பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர்கள் குழுவினர் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். இந்த குழுவில் டாக்டர்கள் ராஜ்குமார், கண்ணன், அருணாதேவி, முத்துசெண்பகம், ஏஞ்சல் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இதுகுறித்து டாக்டர்கள் குழுவினர் கூறுகையில், ‘கடந்த 19ம் தேதி செல்விக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அவரது உடலின் பல இடங்களில் இருந்த கூடுதல் சதைகள் பாதுகாப்பான முறையில் அகற்றப்பட்டன. சுமார் 4 மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை நடந்தது. தற்போது அவரது உடலில் இருந்து 23 கிலோ சதை அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மாதம் வரை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் தற்போது நன்கு உடல் நலம் தேறி சாதாரண வார்டிற்கு மாற்றப்பட்டுள்ளார். விரைவில் அவர் வீட்டிற்கு செல்ல உள்ளார். இனி அவரால் பிறரை போல அனைத்து வேலைகளையும் செய்யமுடியும். இதுபோன்று ஒரு அறுவை சிகிச்சை மதுரையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் 2வதாக தூத்துக்குடியில் நடந்துள்ளது’ என்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-10-2018

    21-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்