SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குற்றச்சம்பவங்களை தடுக்க சென்னையில் காவல்துறையினருக்கு 2 ஷிப்ட் முறை அறிமுகம்

2018-06-13@ 17:49:06

சென்னை: சென்னையில் குற்றச்சம்பவங்களை தடுக்க காவல்துறையினருக்கு இரண்டு ஷிப்ட் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக சென்னையில் இரவு நேரங்களில் குற்றச்சம்பவம் அதிகரித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக பைக் ரேஸ், வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக நேற்று முன்தினம் காவல்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி சுமார் 3000 பேர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் இரவு நேரங்களில் நடக்கும் குற்றச்சம்பவங்களை தடுக்க காவல்துறையினருக்கு இரண்டு ஷிப்ட் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இரவு 10 முதல் அதிகாலை 4 வரை முதல் ஷிப்ட்பணியிலும், அதிகாலை 4 மணி முதல் காலை 8 மணி வரை இரண்டாவது ஷிப்ட் பணியில் காவல்துறையினர் ஈடுபடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 30-ம் தேதி வரை இந்த இரண்டு ஷிப்ட் முறை இருக்கும் என்றும், மேலும் வழக்கமான ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபடுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்