SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதை ஏன் கொள்கை முடிவாக எடுக்கக்கூடாது?: அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி

2018-06-13@ 17:45:33

மதுரை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதை ஏன் கொள்கை முடிவாக எடுக்கக்கூடாது? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி  எழுப்பியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் திடீரென கலவரமாக மாறியது. கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி  நடத்தினர்.பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது.  இதனையடுத்து கடந்த மே மாதம் 28ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.  பின்னர் ஆலைக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி சீல் வைத்தார். இச்செயலுக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை தெளிவற்று இருப்பதாக கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு  தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதி செல்வம் தலைமையிலான அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம்  தலைமையிலான அமர்வு அதிருப்தி தெரிவித்துள்ளனர். தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெளிவு இல்லை, எனவே ஸ்டெர்லைட்  ஆலையை மூட தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து அரசாணை வெளியிட வேண்டும் என்று தெரிவித்தது.

நிவாரணம் வழங்கி மனித உயிர்களை மதிப்பிட முடியாது என்றும் ஒரு மனிதனின் உயிரின் மதிப்பு ரூ.20 லட்சம் தானா? ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு  பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக உயர்நீதிமன்றம் ஏற்கனவே ரூ.100 கோடி அபராதம் விதித்துள்ளது. இதில் இருந்தே எந்த அளவிற்கு சுற்றுச்சூழல்  பாதிப்படைந்துள்ளது என்பது தெரிகிறது என நீதிபதி செல்வம் தலைமையிலான அமர்வு கண்டனம் தெரிவித்தது. இதனையடுத்து வழக்கின் விசாரணை ஜூன் 22 ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-01-2019

    22-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • annauniv

    அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

  • jammukashmir

    ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

  • TulipflowerDay

    நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

  • womesrally

    வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்