SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2026-ல் அமெரிக்கா,கனடா மற்றும் மெக்ஸிகோவில் உலகக் கோப்பை கால்பந்து : ஃபிபா அறிவிப்பு

2018-06-13@ 17:21:14

வாஷிங்டன்: வரும் 2026-ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டிகள் அமெரிக்கா,கனடா மற்றும் மெக்ஸிகோ நாடுகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு உலகமே எதிர்பார்க்கும் 21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நாளை கோலாகலமாக துவங்க இருக்கிறது.மொத்தம் 32 அணிகள் பங்கேற்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவின் 11 நகரங்களில் நடைபெற உள்ளது. போட்டியில் பங்கேற்கும் அணிகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்திய நேரப்படி நாளை இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும் இந்த விழாவை பல்வேறு சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்ய இருக்கிறார்கள்.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் துவங்க உள்ள நிலையில், 2022-ல் உலகக் கோப்பை  கால்பந்து கத்தாரில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2026-ல் நடக்க உள்ள உலகக் கோப்பையை யார் நடத்துவது என்பதை தேர்வு செய்வதற்கான கூட்டம் ரஷ்யாவில் நடைபெற்றது. இதில் ஃபிபாவில் உறுப்பினர்களாக உள்ள 207 நாடுகள் ஓட்டளித்து முடிவு செய்யதன. இதன்படி நடைபெற்ற வாக்கெடுப்பின் முடிவில் 2026-ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்ஸிகோ நாடுகளில் நடைபெறும் என்றும் ஃபிபா அறிவித்துள்ளது.  இந்த மூன்று நாடுகளும் உலகக் கோப்பை தொடருக்கான தகுதிச் சுற்றில் விளையாட வேண்டிய தேவையிருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்