SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சர்வ சாலை பணிகளிலும் தனது சம்பந்திக்கே ஒப்பந்தம் கொடுத்த பாசக்கார முதல்வர்

2018-06-13@ 17:04:50

சென்னை: தமிழக அரசின் நெடுஞ்சாலை திட்டங்களில் பல ஆயிரம் கோடி ஊழல்  நடைபெற்றுள்ளதாக திராவிட முன்னேற்ற கழகம் புகார் தெரிவித்துள்ளது. இந்த ஊழல்  குறித்து விசாரணை நடத்த ஆர்.எஸ்.பாரதி சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் திமுக  வழக்கறிஞர் புகார் மனு அளித்துள்ளார். புகார் குறித்து உடனே நடவடிக்கை எடுக்குமாறும்  மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

*ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலை அமைக்க ரூ.713 கோடிக்கு பதில் ரூ.1515  கோடி ஒதுக்கீடு செய்ததாகவும், சாலை பணிக்கான தொகையை அதிகமாக்கி, முதல்வர்  எடப்பாடி பழனிசாமி மகனின் மைத்துனர் இயக்குநராக உள்ள நிறுவனம் ஒப்பந்தத்தை  பெற்றுள்ளது.

*நெல்லை- செங்கோட்டை-கொல்லம் சாலைக்கு ரூ.470 கோடிக்கு பதில் ரூ.720 கோடி  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெல்லை- செங்கோட்டை சாலைக்கு முதல்வர் எடப்பாடி   சம்பந்தி வெங்கடாசலபதி நிறுவனம் மட்டுமே ஒப்பந்தம் கோரியது, இதனையடுத்து  எடப்பாடி சம்பந்திக்கு இந்த ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது.

*ராமநாமபுரம், திருவள்ளூர், விருதுநகர் மாவட்டங்களில் சாலை மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்து எடப்பாடி சம்பந்திக்கு மட்டுமே ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது.

*மதுரை மாவட்டம் ரிங் ரோடு சாலைப்பணியை பாலாஜி டால்வேஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

*சென்னை-வண்டலூர்-லாலாஜபாத் சாலை பணி ஒப்பந்ததம் முதல்வர் சம்மந்தியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

*5 நெடுஞ்சாலைப்பணிகளில் 2 திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். 5 திட்டங்களில் 2 திட்டங்கள் சம்பந்திக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

சாலை லாபம்:
ஒப்பந்ததாரர் லாபம் உள்பட ஒரு கிலோமீட்டருக்கு சாலை அமைக்க ரூ.2.2 கோடி செலவாகும், அதன்படி கி.மீக்கு ரூ2.2 கோடி வீதம் 45.64 கோடி நீள சாலை அமைக்க ரூ.300 கோடி செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்