SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேசத்தை மதிக்கும் 'தலைமறைவு சேகரின்' நாட்டுப்பற்றை பாருங்கள்...

2018-06-13@ 16:45:47

சென்னை: பெண் பத்திரிகையாளர்கள் குறித்து இழிவாக கருத்து பதிவிட்ட வழக்கில் எஸ்.வி.சேகரை கைது செய்ய பத்திரிகையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அவர் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புடன் தலைமறைவாக ஹாயாக காரில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் தாம்பரம் படப்பை அருகே ஒரு உணவு விடுதி ஒன்றில் சாப்பிட எஸ்.வி.சேகர் சென்றார். அவருக்கு துணையாக ஆயுதம் ஏந்திய காவலர்கள் இருந்தனர். அப்போது சேகர் எப்போதும் தனது சட்டை பாக்கெட்டில் நெஞ்சின் ஓரம் குத்தியிருக்கும் தேசியக் கொடி இன்று இடம் மாறியிருந்தது.

அவரது சட்டை முடிவின் கீழே ஒரு ஓரமாக குத்தியிருந்தார். இதனை நேரில் கண்ட பலர் அவரை மனதார மனதிற்குள் வாழ்த்தினர். தேசியக் கொடிக்கென்று மரியாதை கொடுக்காமல் நினைத்த இடத்தில் கொடியை குத்தியள்ளாரே என்றும் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

தன்னை கைது செய்யக் கோரி நீதிமன்றம் உத்தரவிட்டும் அதனை பொருட்படுத்தாமல், சட்டத்தை சிறிதும் மதிக்காமல் காவலர்கள் துணையுடன் மிடுக்குடன் பொதுவெளியில் நடமாடி வரும் எஸ்.வி.சேகர் தற்போது கொடியை அவமதிக்கும் வகையில் சட்டையின் கீழ் குத்தியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எப்போதும் நாட்டு பற்று , தேசப்பற்று என்று பெருங்குரலெழுப்பும் அவரே தேசியக்கொடியை அவமானப்படுத்தும் வகையில் செயல்பட்டிருப்பதற்கு பெரும் கண்டனம் எழுந்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-01-2019

    15-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • MakarSankrantiFestival

    வட மாநிலங்களில் பெண்கள் கோலாகலமாக கொண்டாடிய மகர சங்கராந்தி பண்டிகை

  • 14-01-2019

    14-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 13-01-2019

    13-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 12-01-2019

    12-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்