SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

இந்திய விமான படைக்கு 6 அதிநவீன ஹெலிகாப்டர்களை விற்பனை செய்ய அமெரிக்க அரசு ஒப்புதல்

2018-06-13@ 12:10:03

வாஷிங்டன்: இந்திய விமான படைக்கு 6 அதிநவீன ஹெலிகாப்டர்களை விற்பனை செய்ய அமெரிக்க அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு பின் இந்த பரிவர்த்தனை நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூ.6285 கோடி மதிப்பில் 6 அபாச் ரக ஹெலிகாப்டர்களை இந்தியாவிற்கு விற்க அமெரிக்க அரசு தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது. AH 6 அபாச் ரக ஹெலிகாப்டர்கள் இந்தியாவின் பாதுகாப்பு துறையை நவீனப்படுத்துவதுடன் எதிரி நாட்டு படைகளுக்கு தக்க பதிலடி கொடுக்க பயன்படும் என்று அமெரிக்க பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது.

இரவிலும் இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன், தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் ஹெலிப்யர் கவசம் உள்ளிட்டவை இதன் சிறப்பு அம்சமாகும். இதன் மூலம் இந்திய விமானப்படை மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பாகிஸ்தான் அடிக்கடி எல்லை தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த ரக ஹெலிகாப்டர்கள் பெரிதும் பயன்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • georgiyaropecar

    ஜார்ஜியா நாட்டில் ரோப் கார்கள் மூலம் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் கிராம மக்கள்

  • chinaindustryexpo

    சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற 20வது சர்வதேச தொழில்நுட்பக் கண்காட்சி

  • thirupathiseventh

    திருப்பதியில் 7வது நாள் பிரமோற்சவம் : சந்திர பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

  • 20-09-2018

    20-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • amazon_bang_111

    ஆன்லைன் வர்த்தக் நிறுவனமான அமேசானின் சேகரிப்புக் கூடம் பெங்களூருவில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்