SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத்தீ: ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை அணைக்கும் பணிகள் தீவிரம்

2018-06-13@ 10:49:18

கலிபோர்னியா: அமெரிக்காவில் மீண்டும் ஏற்பட்ட காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். கலிபோர்னியா மாகாணத்தில் பேகல்லி மலைப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிவதால் அந்த பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த 250 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். காற்றின் வேகத்துக்கு கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டுத்தீயால் பல்வேறு மரங்கள் எரிந்து சாம்பலாகின.

மேலும் பல விலங்குகள் தீயில் கருகி உயிரிழந்தன. இதனால் காட்டுத்தீயை கட்டுப்படுத்த ஹெலிகாப்டர்கள் மூலம் ரசாயன பூச்சுகள் வீசப்படுகிறது. மேலும் காட்டுத்தீயால் அந்த பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்படுகிறது. கலிபோர்னியா பகுதியில் முன்னதாக ஏற்பட்ட காட்டுத்தீயில் பல்வேறு வீடுகள் எரிந்து பெரும் பொருட் சேதம் ஏற்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் அப்பகுதி மக்கள் மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளனர். 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

  • israelfire

    காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

  • singaporeasianmodi

    சிங்கப்பூரில் 13வது கிழக்காசிய உச்சி மாநாடு : பிரதமர் மோடி பங்கேற்பு!

  • crowd_thiruchendhuru11

    சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர் : சூரசம்ஹார நிகழ்ச்சியால் திருச்செந்தூர் விழா கோலம் பூண்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்