SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை சீக்ரெட்ஸ்

2018-06-13@ 10:39:36

நன்றி குங்குமம் முத்தாரம்

மெட்ராஸ் உதயம்!

ஆங்கிலேயர்களின் தொழிற்சாலை 1639ம் ஆண்டு உருவானது.‘History of the City of Madras’ என்கிற நூலில் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் சி.எஸ்.ஸ்ரீனிவாசாச்சாரி, ‘‘பழவேற்காட்டில் இருந்த டச்சுக்காரர்களுக்கும், சாந்தோமில் இருந்த போர்த்துகீசியர்களுக்கும் நடந்த போர்களால் மக்கள் நிம்மதி இழந்தனர். அதைத் தடுக்க, இப்பகுதியை ஆண்ட தமர்ல வெங்கடாத்ரி டச்சுப்பகுதிக்கும், சாந்தோமிற்கும் இடையில் தம் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரில் கிராமத்தை (சென்னப்பட்டணம்) உருவாக்குகிறார்.

ஆங்கிலேயர்களுக்கு மணல்திட்டு பகுதியைத் தமர்ல வெங்கடாத்ரி அளிக்கும்போது, அப்பகுதி ஒப்பந்தத்தில் மதராசபட்டிணம் என்றுள்ளது. ஆக, மதராசபட்டிணம், சென்னப்பட்டிணம் என்பது இருவேறு கிராமங்கள். ஆங்கிலேயர்கள் கோட்டையுடன், தங்கு வதற்கான குடியிருப்பையும் கட்டுகின்றனர். கூடுதலாக, இந்திய பணியாளர்களுக்காக வடக்கே புதிதாக ஒரு நகரும் உருவாகிறது.

இந்நகரையும் சென்னப்பட்டிணம் என்றே நம்மவர்கள் அழைத்துள்ளனர். இந்தியர்கள் வாழ்ந்த இடம் சென்னப்பட்டிணம் என்றும், கோட்டையும், ஆங்கிலேயர்களின் குடியிருப்பும் மதராசபட்டிணம் என்றும் அழைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆங்கிலேயர்கள் இவ்விரு நகரினையும் மதராசபட்டிணம் (மதராஸ்) என்றே குறிப்பிட்டனர்’’ என்கிறார் அவர்.

பிகே

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்