சிங்கப்பூரில் நேற்று அதிபர்கள் டிரம்ப்- கிம் ஜோங் உன் சந்திப்பு: ஐநா வரவேற்பு
2018-06-13@ 10:33:45

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்- வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் சந்திப்பிற்கு உலகநாடுகளின் தலைவர்களும், ஐக்கிய நாடுகள் சபையும் வரவேற்பு தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா ஓட்டலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்- வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையேயான வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு காலை 6.30 மணியளவில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது இருநாட்டு அதிபர்களும் 45 நிமிடங்கள் தனியாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின் போது அணு ஆயுத கூடம் முழுமையான ஒழிக்கப்படும் என வடகொரிய அதிபர் ஜிங் உன் தெரிவித்தார்.
இதனையடுத்து அமெரிக்கா-வடகொரியா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அமெரிக்கா அதிபர் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜோங்க் உன் இடையே நேற்று சிங்கப்பூரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையை இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகள் வரவேற்றுள்ளன. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘அமெரிக்கா - வடகொரியா அதிபர்கள் இடையேயான சிங்கப்பூர் சந்திப்பை வரவேற்கிறோம். இது இருநாடுகள் இடையே நேர்மறையான முன்னேற்றத்தை குறிக்கிறது.
கொரிய தீபகற்பத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியாக நிலவ இந்தியா எப்போதும் தீவிர ஒத்துழைப்பை வழங்கும்’’ என்று கூறப்பட்டுள்ளது. இதேபோல் இந்த பேச்சுவார்த்தை சிறப்பான ஒரு துவக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக, தென்கொரியா, சீனா, ரஷ்யா உள்பட பல்வேறு நாடுகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சந்திப்பிற்கு ஜநா அவை வரவேற்பு தெரிவித்துள்ளது. இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தையின் மூலம் எந்த பிரச்சனைகளையும் தீர்க்க முடியும் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும், கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவ இந்த நடவடிக்கை நல்ல தீர்வாக அமைத்திருக்கிறது. அமைதி முயற்சி சவாலான ஒன்றுதான் என்றுபோதும், அது நிறைவேறும்போது மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் ஐநா அவை தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள்
புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாக். உறவு மோசமாகி விட்டது: டிரம்ப் கருத்து
உலகின் மிகப் பெரிய தேனீ இந்தோனேசியாவில் கண்டுபிடிப்பு
இந்தியா - பாகிஸ்தான் இடையே ஆபத்தான சூழ்நிலை: புல்வாமா தாக்குதலை அடுத்து டிரம்ப் பேட்டி
பெரு நாட்டின் ஈக்வடாரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 7.5ஆக பதிவு
உலக நாடுகள் நிர்ப்பந்தத்துக்கு பணிந்து ஜெய்ஷ் தீவிரவாத அமைப்பு தலைமை அலுவலகம் முடக்கம்: பாகிஸ்தான் நடவடிக்கை
லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நாளை 91வது ஆஸ்கர் விருது விழா