SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆன்லைன் வர்த்தக விற்பனை பிரதிநிதியிடம் ரூ41 ஆயிரம் மதிப்பு பொருட்கள் அபேஸ் : சுருட்டிக்கொண்டு தப்பியவர்கள் வடமாநில வாலிபர்களா?

2018-06-13@ 00:55:38

மைசூரு :  ஆன்லைன் வர்த்தக விற்பனையாளர் விற்பனைக்கு கொண்டு சென்றபோது ரூ.41 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு போயின. இதில் ஈடுபட்டவர்கள் வட மாநிலத்தை சேர்ந்த வாலிபர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். மைசூரு வித்யநாராயணபுரத்தில் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் பொருட்களை அந்தந்த முகவரிக்கு கிரிஷ் பாபு என்ற விற்பனையாளர் வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு வீட்டின் முன்பு பைக்கை நிறுத்திவிட்டு அதில் பொருட்கள் இருந்த பையை வைத்துவிட்டு வீட்டில் பொருட்களை வழங்க சென்றார். சிறிது நேரம் கழித்து திரும்பி  வந்து பார்த்தபோது பையை காணவில்லை. அந்த பையில் விலை உயர்ந்த செல்போன்கள் உள்பட ரூ.41 ஆயிரம் மதிப்புள்ள 31 வகையான பொருட்கள் இருந்துள்ளன.

இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இதேபோல கடந்த ஜூன் 2ம் தேதி ஆன்லைன் விற்பனையாளர் கொண்டு சென்ற செல்போன் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் விற்பனையாளர்களை குறிவைத்து நடக்கும் இந்த கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விற்பனையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து வித்யநாராயணபுரா காவல்துறை ஆய்வாளர் கூறுகையில் ‘’பொருட்கள் காணாமல்போன இடத்தில் சி.சி.கேமரா பொருத்தவில்லை. எனவே கொள்ளையடித்த நபர்களை கண்டுபிடிப்பது சிரமம். இதில் வட மாநில இளைஞர்கள் ஈடுபட்டிருக்கலாம். ஆன்லைன் வர்த்தகத்தில் பணியாற்றும் இளைஞர்களை குறிவைத்தே இது போன்ற கொள்ளை சம்பவங்கள் அரங்கேறுகின்றன’’ என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • militaryparangimalai

    ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்

  • guwahatidiadhani

    குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

  • koreanwarmeet

    கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

  • srilankakitefestival

    இலங்கையில் பட்டம் திருவிழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டங்களுடன் பங்கேற்பு

  • studendsrussiachennai

    ரஷ்யா மற்றும் ஹங்கேரி கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்ற கூடங்குளம் மாணவர்கள் சென்னை திரும்பினர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்