SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஏ.டி.எம்மில் ரூ5 லட்சம் கொள்ளை : பெங்களூரு கிரைம்

2018-06-13@ 00:52:26

பெங்களூரு ஹெப்பகோடி சரகத்திற்குட்பட்ட ஆனேக்கல் சாலையில் அமைந்துள்ளது கனரா வங்கிக்குரிய ஏ.டி.எம் மையம். கடந்த சனிக்கிழமை இரவு இந்த ஏ.டி.எம்மிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் சிலர் பெட்டகத்தை குறி பார்த்து உடைத்து, அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றனர். பணம் நிரப்பும் அலுவலகத்தை சேர்ந்த ஊழியர்கள் ஏ.டி.எம்மை சோதனை செய்தபோது, ரூ.5.02 லட்சம் ரொக்கப்பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்று இருப்பது தெரியவந்தது.

இன்ஜினியர் தற்கொலை
மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் பவேஷ் ஜெஸ்வால் (23). பெங்களூரு இந்திராநகர் பகுதியில் வசித்து வந்தார். ஒயிட்பீல்ட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார்.  தனது நிறுவனத்தில் தனியாக இருந்த பவேஷ், திடீரென்று 12வது மாடியில் இருந்து ஜன்னல் வழியாக கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

ரூ.2.50 லட்சம் திருட்டு
பெங்களூரு கிரிநகர் எஸ்.பி.எம் காலனி சீதா சர்க்கிள் பகுதியை சேர்ந்தவர் மஞ்சுளா. நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டை பூட்டிவிட்டு, உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். நள்ளிரவு திரும்பி வந்து பார்த்தபோது கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் கிரிநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சென்று விசாரணை நடத்தினர். அதில் மர்ம நபர்கள் வீட்டில் ஆள் இல்லை என்பதை தெரிந்து கொண்டு, கதவு, பீரோவை உடைத்து ரூ.2.50 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை திருடிச் சென்றிருப்பதாக தெரியவந்தது.

ஓட்டலில் டி.வியை திருடிய 2 பேர் கைது
பெங்களூரு ஜே.பிநகர் சரகத்திற்குட்பட்ட நியூ திப்பசந்திராவை அடுத்த கீதாஞ்சலிநகர் பகுதியில் அமைந்துள்ளது பிரபல தனியார் ஓட்டல். இந்த ஓட்டலில் நுழைவு பகுதியில் இருந்த பாதுகாவலர்களிடம் கடந்த 2 தினங்களுக்கு முன்பு 2 திருடர்கள் சிக்கிக் கொண்டனர். அதாவது ஓட்டலில் தங்கியிருந்த இவர்கள், அங்கிருந்த டி.வியை திருடிக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சென்ற ஜே.பிநகர் போலீசார் இருவரையும் மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் தெலுங்கானாவை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. போலி கார்டுகளை வைத்து, ஓட்டலில் அறை எடுத்து, தங்கி டி.வியை திருடிச் செல்ல முயற்சித்திருப்பது தெரியவந்தது.

முதியவர் கைது
பெங்களூரு உப்பார்பேட்டை சரகத்திற்குட்பட்ட மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் 20 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் தனது தோழிகளுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது 60வயது முதியவர் ஒருவர் அங்கும், இங்குமாக நடமாடியபடி இளம் பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்டுள்ளார். இதை பார்த்த இளம் பெண் கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து சம்பவ இடத்தில் இருந்த வாலிபர்கள் சிலர், முதியவரை பிடித்து உப்பார்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.

ஏமன் நாட்டு மாணவர் பலி
பெங்களூரு தனி சந்திரா பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் டி பார்ம் படித்து வந்தவர்கள் அப்துல் (21), மஜீத். இரண்டு பேரும் ஏமன் நாட்டை சேர்ந்தவர்கள். நேற்று முன்தினம் இரவு இரண்டு பேரும் கல்லூரி முடிந்து பைக்கில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். ஹென்னூர் மெயின் ரோடு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று இவர்களது பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு சுவரில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயமடைந்தனர். தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 2 பேரில் அப்துல் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு உயிரிழந்தார்.

செயின் பறிப்பு
பெங்களூரு விஜயநகர் 2வது கிராஸ் 7வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் மஞ்சம்மா. நேற்று முன்தினம் இரவு இவர் தூங்கி கொண்டிருந்தபோது, திடீரென்று மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் மஞ்சம்மா ஜன்னல் கதவை திறந்து வைத்து கொண்டு தூங்கினார். இதை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் ஜன்னல் வழியாக கைவிட்டு மஞ்சம்மாவின் கழுத்தில் கிடந்த  64 கிராம் செயினை பறித்துச் சென்றுவிட்டார்.

வாலிபர் கைது
பெங்களூரு ஆடுகோடி சந்திரப்பா நகரை அடுத்த டைரி சர்க்கிள் 9வது கிராசில் சாந்தகுமார் என்ற வாலிபர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து சென்ற வழிப்பறி கொள்ளையன், கத்தி முனையில் சாந்தகுமாரை மிரட்டி செல்போனை பறித்துக் கொண்டு தப்பியோடினார். சாந்தகுமார் அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். சத்தம்கேட்டு ஓடி வந்த பொதுமக்கள் வழிப்பறி கொள்ளையனை மடக்கி பிடித்து சரமாறியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.
 
வீலிங் செய்த 30 பேர் கைது
பெங்களூரு மற்றும் நெலமங்களா டோல் கேட் அருகே நேற்று முன்தினம் இரவு 30க்கும் அதிகமான வாலிபர்கள் பைக் வீலிங்கில் ஈடுபட்டு இருந்தனர். இது பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தது. உடனே அவர்கள் சம்பந்தப்பட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி விரைந்து சென்ற ரோந்து போலீசார் பைக் வீலிங்கில் ஈடுபட்ட 30க்கும் அதிகமான வாலிபர்களை கைது செய்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • kmkharippastatue

  சென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு!

 • Stalinarrestvolunteersstirstir

  தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

 • president_kovindh_cuba123

  கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

 • RePlantingCanada

  அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

 • 23-06-2018

  23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்