SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நான் குற்றமற்றவன் என சந்துருஜி கதறல் ஏடிஎம் கொள்ளையர் தலைவன் நீதிமன்றத்தில் சரண்?: சிபிசிஐடி போலீஸ் கிடுக்கிப்பிடி

2018-06-13@ 00:39:51

புதுச்சேரி: அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பழிவாங்கப்பட்டுள்ளதாக ஏடிஎம் மோசடியில் தேடப்படும் சந்துருஜி பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். நெருக்கடி அதிகரிக்கவே நீதிமன்றத்தில் சரணடைய திட்டமிட்டுள்ளார். புதுச்சேரி ஏடிஎம் கார்டு மோசடி வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டாக்டர், பல்கலை. ஊழியர், கம்ப்யூட்டர் நிறுவன அதிபர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு இதில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முக்கிய குற்றவாளியான அதிமுக மாஜி பிரமுகரான முத்தியால்பேட்டை சந்துருஜியை சிபிசிஐடி வலைவீசி தேடி வருகிறது. அவரது தம்பி மணிசந்தரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இவ்வழக்கில் 50 நாட்களாக  தலைமறைவாக உள்ள சந்துருஜியை மும்பை லாட்ஜில் சிபிசிஐடி தனிப்படை சுற்றிவளைத்ததாக தகவல் வெளியானது.

இதை மறுத்த சிபிசிஐடி, அவரை நெருங்கிவிட்டதை மட்டும் உறுதி செய்தனர். சந்துருஜி நேற்று முன்தினம் தனது பேஸ்புக் பக்கத்தில் ஏடிஎம் மோசடி வழக்கு தொடர்பாக 5 நிமிடம் ஓடக்கூடிய வீடியோ பதிவை வெளியிட்டார். அதில், என்னை வேண்டுமென்றே ஏடிஎம் வழக்கில் சேர்த்துள்ளனர். நான் பிளஸ்1 படிக்கும் போதிலிருந்தே பிசினஸில் ஈடுபட்டிருந்தேன். நிரந்தரமாக ஒரு பிசினஸ் செய்யலாம் என நினைத்து ரூ.50 லட்சம் கடன் வாங்கி லீசுக்கு ஓட்டலை எடுத்து நடத்தினேன்.அப்பா ஆரம்பத்திலிருந்தே அரசியலில் இருந்து வந்தார். இதனால் நானும் அரசியலில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். நான் சம்பாதித்தில் 40 சதவீதம் மக்களுக்கு செலவு செய்ய ஆரம்பித்தேன். மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றேன். எனக்கு நிறைய எதிரிகள் இருக்கிறார்கள் என்பது அப்போது தெரியவில்லை. இப்போதுதான் தெரிகிறது.

கடந்த 50 நாட்களாக நான் ஓடிக் கொண்டிருக்கிறேன். எனக்கு எவ்வளவு எதிரிகள் இருக்கிறார்கள். எனக்கு பின்னாடி இவ்வளவு பேர் வேலை செய்கிறார்கள். இதில் ஒரு எம்எல்ஏவும் பின்னாடி இருக்கிறார் என்றெல்லாம் செய்தி சொல்கிறார்கள். இந்த வழக்கில் நான் எப்படி வந்தேன் என்றே தெரியவில்லை. இதற்கும், எனக்கும் எந்த சம்பந்ததும் இல்லை. நான் சம்பாதித்ததற்கு முறையாக வருமான வரி கட்டி இருக்கிறேன். இவ்வாறு அதில் கூறியிருந்தார். சந்துருஜி வெளியிட்ட இந்த பேஸ்புக் பதிவு காவல்துறையில் மட்டுமின்றி அரசியல் வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது கருத்து ஏற்கும்படி இல்லை என்று பல்வேறு அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதனிடையே சந்துருஜி வெளியிட்ட மற்றொரு பதிவில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, எனது குடும்பமும் நண்பர்களும் பழிவாங்கப்பட்டு உள்ளோம். அப்பாவியான நான் குற்றமற்றவன் என்பதை நீதிமன்றத்தில் சட்டரீதியாக நிரூபிப்பேன் என தெரிவித்துள்ளார்.

சந்துருஜியின் அடுத்தடுத்த பேஸ்புக் தகவலால் சிபிசிஐடி அதிகாரிகளுக்கு நெருக்கடி முற்றியுள்ளது. சந்துருஜி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு மீண்டும் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சந்துருஜி ஆன்ட்ராய்டு செல்போனை பயன்படுத்தாமல், சாதாரண செல்போனை பயன்படுத்துகிறார். இதுவரை 125 சிம்கார்டுகளை மாற்றி மாற்றி பயன்படுத்தி வருவதால் அவர், எங்கே இருக்கிறார் என தெரியாமல் போலீசார் திணறி வருகின்றனர். 50 நாட்களுக்கு பிறகு முகநூல் பதிவு: சந்துருஜி பேஸ்புக் பதிவு கடைசியாக பிப்ரவரி 28ம்தேதி செயல்பாட்டுடன் நிறுத்தப்பட்டிருந்தது. அதன்பிறகு 50 நாட்களாக செயல்படாமல் இருந்த அவரது பேஸ்புக் பதிவு ேநற்று முன்தினம் முதல் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது. அவரது ேபஸ்புக் பதிவில், சந்துருஜி முக்கிய புகைப்படமும், பழைய தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • militaryparangimalai

  ராணுவ வாகனங்கள், ஆயுதங்கள், யானை தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கும் பரங்கிமலை ராணுவ பயிற்சி மையம்

 • guwahatidiadhani

  குவஹாத்தியில் தியோதானி திருவிழா கொண்டாட்டம் : விலங்குகளை பலி கொடுத்து பக்தர்கள் வழிபாடு

 • koreanwarmeet

  கொரிய போரின் போது குடும்பங்களை பிரிந்து சென்ற மக்கள் 65 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணீர்மல்க சந்திப்பு

 • srilankakitefestival

  இலங்கையில் பட்டம் திருவிழா கோலாகலம் : பல்லாயிரக்கணக்கானோர் வண்ணமயமான பட்டங்களுடன் பங்கேற்பு

 • studendsrussiachennai

  ரஷ்யா மற்றும் ஹங்கேரி கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்ற கூடங்குளம் மாணவர்கள் சென்னை திரும்பினர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்